நமது கணினியில் எந்தெந்த செட்டிங்க்ஸ் எங்கு இருக்கிறது என்று தேடுவது சற்று சிரமமான காரியம் தான்.எடுத்துகாட்டாக ப்ரௌசெர் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும்,பாஸ்வோர்ட் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும் ஆடியோ தொடர்பான செட்டிங் ஒரு இடத்திலும் இருக்கும்.இப்படி இல்லாமல் நமது கணினியில் இருக்கும் அனைத்து செட்டிங்க்சும் ஒரு Complete packageஜாக ஒரே இடத்தில் ஒரு போல்டேருக்குள்(Folder) இருந்தால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் தானே??
நமது வாசகர்களுக்காக சின்னதாக ஒரு "Utility program" எழுதி அதனை சாத்தியப்படுத்தியுள்ளோம் . அதுவும் மிக எளிதாக இதனை உங்கள் கணினியில் நிறுவ முடியும்.
உங்கள் டெஸ்க்டாப்பில் போல்டெர்(Folder) ஒன்று தயாரித்து கொள்ளுங்கள்.
Desktop --Right click ----New----Folder
பிறகு அந்த போல்டெரை ரைட் கிளிக் செய்து Rename செய்து கீழே தரப்பட்டுள்ள பெயரை அதற்கு தந்து விடுங்கள்.
God Mode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
கீழே உள்ள உள்ள படம் போல உங்களது டெஸ்க்டாப்பில் வந்து விடும்
உள்ளே உங்களுக்கு தேவையான அனைத்து செட்டிங் சும் ஒரே இடத்தில நீங்கள் பார்க்கலாம்
Windows 7, Windows 8 32bit and 64bitயில் இது வேலை செய்கிறது .windows vista 64bit யில் நான் பரிசோதித்து பார்க்கவில்லை.
இதற்கு மைக்ரோசாப்ட் Windows Master Control Panel shortcut என்று பெயர் தந்துள்ளனர். இதற்குGodmode என்று இதனை பயன்படுத்திய பயனாளர்கள் பெயர் வைத்துள்ளனர்.பயன்படுத்தி பாருங்கள்..
தகவல் பிடித்து இருந்தால் share செய்யவும்
No comments:
Post a Comment