Sunday, October 27, 2013

கணினியை பாதுகாப்பாக இயக்க 25 வழிகள்(Computer Tips)

நாம் கணினியை பயன்படுத்துகையில் பலவகையான பிரச்சனைகள் வரக்கூடும். அதிலும் நாம் இணையத்தில் இருக்கையில் நம்மை அறியாமலேயே கணினிக்கு கெடுதல் விளைவிக்கும் பல வைரஸ் உள்புகுந்திட வாய்ப்புள்ளது. இதனால் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தமுடியாமல் இருக்க முடியமா?முடியாது. நம்மில் பலர் கணினியை  பயன்படுத்தும் அளவு அதன் பாதுகாப்பில் அக்கறைக் கொள்ளமாட்டார்கள். அப்பொழுது நமக்கு கணினி பிரச்சனை தர ஆரம்பிக்கும். எனவே கணினிக்கு தேவையான பாதுகாப்பினை ஏற்படுத்திவிட்டால் இவ்வாறான பிரச்சனைகள் வராது. கணினியை எவ்வாறெல்லாம் பாதுகாக்கலாம் என்ற வழியினை  பார்ப்போம்.

 

 
௦01. கணினிக்கு தேவையான பாதுகாப்பு புரோகிராம் "ஆன்டி வைரஸ் புரோகிராம்". இதனை  நிறுவி அதன் மூலமாக வைரஸ்வருவதினை தடுக்கலாம். இதனை எப்பொழுதும் இயக்கதினிலே வைத்திருக்க வேண்டும் .  அதனை சரியான காலத்தில் அப்டேட் செய்துவைத்திருக்கவேண்டும்.
 
௦௦02. ஆன்டி ஸ்பைவேர் ஒன்று அல்லது இரண்டு பதிந்து வைத்து இயக்க வேண்டும். ஏற்கனவே கணினியிலேயே இருந்தால் நல்லது.



0௦3.இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். தற்போது வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் சேர்ந்தே வருகிறது. இல்லையெனில் இதனை நிறுவிக்கொள்ளலாம்.



௦04. ஆன்டி வைரஸ் மற்றும் பயர்வால் ஒன்று இருந்தாலே போதுமானது. இரண்டு மூன்று இருப்பின் பிரச்சனைதான்.



0௦5. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை கணினியில் நிறுவிட அனுமதிக்க வேண்டும். அப்பொழுதுதான்  கணினியில் ஏற்படும் பிரச்சனைகளை  ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் நிறுவனம் மூலம் கண்டறிந்து சரிசெய்ய முடியும்.



06. பிராட்பேண்ட் இணைப்பினை  ரௌட்டர்(ROUTER)  இல்லாமல்  பயன்படுத்தக்கூடாது. அது வயர்டு அல்லது வயர்லெஸ் எதுவாக இருந்தாலும்  சரி. இவை  கட்டாயம் NAT  அல்லது SPI ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.


07. CD அல்லது பென்டிரைவு ( PENDRIVE ) போன்றவற்றை பயன்படுத்தும் போது அதில் உள்ள பைல்களில் வைரஸ் இருக்குமென சந்தேகம் வந்தால் அதனை நமது ஆண்டி  வைரஸ் உதவியுடன் சரிசெய்யலாம். இதன்பின்னும் வைரஸ் நீக்கமுடியவில்லை எனில் உடனே அதனை  virustotal.com   என்ற தளத்திற்கு அனுப்பி சரிசெய்யலாம் அல்லது   scan@virustotal.com 
என்ற இமெயில் முகவரிக்கு   scan  என்று சப்ஜெக்டில் டைப் செய்து அனுப்பினால் முழுமையாக ஸ்கேன் செய்து நமக்கு  தரும்.



08. நாம் விண்டோஸ் இயக்கத்தின் போது நமக்கு தெரியாமல் பல புரோகிராம்கள் இயங்கிகொண்டிருக்கும் அதனை டாஸ்க் மேனேஜரை கொண்டு என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிகொண்டிருக்கிறது என அறிந்து அவைதேவைப்பட்டால் வைத்துகொண்டு வைரஸ் பரவக்கூடிய புரோகிராம்களை நீக்கிவிடவேண்டும்.



09. CD அல்லது பென்டிரைவு ( PENDRIVE ) போன்றவற்றை பயன்படுத்தும் போது ஆட்டோ ரன் அல்லது ஆட்டோ ப்ளே இயங்குகின்றனவா? அதனை நிரந்தரமாக நிறுத்திவிடவேண்டும். இதற்கு Tweak Ul  நமக்கு உதவுகின்றது.



10. ஆன்டி வைரஸ் மூலம் தடுக்கமுடியாத போது வைரஸ் குறித்த சந்தேகங்களை மைக்ரோசாப்ட் மூலம் கேட்டு அறிந்துகொண்டு சரிசெய்யலாம்.



11. பாஸ்வோர்ட் பலம்வாய்ந்ததாக இருக்கவேண்டும். அது எண்கள் மற்றும் எழுத்துகள் கலந்ததாக இருப்பது நல்லது. நமது பாஸ்வோர்டினை  அடிக்கடி மாற்றிக்  கொண்டிருக்கவேண்டும். இணையத்தில் பாஸ்வோர்ட் அமைத்தல் தொடர்பான (www.passpub.com )தளங்கள் நிறைய உள்ளன. அதன் தகுந்த ஆலோசனைப்படி  பாஸ்வோர்டினை அமைத்துக்கொள்ளலாம்.



12. அனைத்து கணினிகளிலும் ஒரே பாஸ்வோர்டினைக் கொண்டு

பயன்படுத்தவேண்டாம். ஏனெனில் அக்கணினியில் பாஸ்வோர்டினை  பதிவெடுக்கும் மென்பொருள்  ஏதேனும் இருப்பின் நமது பாஸ்வோர்ட் திருடப்படும். எனவே மாறான பாஸ்வோர்டினை  பயன்படுத்தவும்.  சிக்கலான மாஸ்டர் பாஸ்வோர்ட் ஒன்று வைத்துக் கொண்டு,அதில் சிறுசிறு மாறுதல்கள் செய்து பயன்படுத்தவும்.



13. நமது இமெயில்களில் வரும் அனைத்து லிங்குகளையும் திறந்து பார்க்ககூடாது. நமக்கு சந்தேகமில்லாத தெரிந்தவற்றை மட்டுமே திறக்கவேண்டும். மற்றவைகளை நீக்கிவிடலாம். ஏனெனில் அவற்றில் கணினிக்கு பாதிப்பு ஏற்படும் வைரஸ்கள் இருக்கலாம்.



14. இமெயிலில் வரும் விளம்பரம் மற்றும் கவர்சிகரமான அறிவிப்புகள்

கொண்டுவரும்  பைல்களை எக்காரணம் கொண்டும் திறக்கவேண்டாம். அவை நன்கு தெரிந்த பைல்கள் என்றால் மட்டும் திறக்கவும். இது போன்ற கவர்சிகரமான விளம்பரங்கள் மூலம் கெடுதல் விளைவிக்கும் வைரக்களை  பரப்பிவிடுகின்றனர்.



15. உங்கள் கணினியில் ஸ்பைவேர் உள்ளது அதனை நாங்கள் இலவசமாக நீக்கி தருகிறோம் என எந்த செய்தி வந்தாலும் உடனடியாக அதனை நீக்கிவிடவும்.



16.எப்பொழுதும் பிஷ்ஷிங் பில்டர்களை இயக்கநிளையிலேயே  வைத்திருக்க வேண்டும்.



17. உங்கள் பிரவுசர்களை பாதுகாப்பு அம்சங்கள் அதிகம்  உள்ளதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். இப்பொழுது கிரோம்  மற்றும் பயர் பாக்சில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை  விட பாதுகாப்பு சாதனங்கள் அதிகமாகும்.



18.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக நிறுத்திவையுங்கள். அவைத்தான் பிரவுசர்களை நம் அனுமதியின்றி சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இவை உதவி புரிகின்றது. எனவே இதனை தடை செய்யவேண்டும்.



19. நம்மை  பற்றிய   தகவல்களை தருவதற்கு முன் அந்த தளம் பாதுக்காப்பானதா ,நம்பகமான தளமா என்பதை உறுதிசெய்யவேண்டும். நம்பகமான தளம்மெனில் அதன் முகவரியில் ' https ' என இருக்கவேண்டும் அல்லது வேறு இடங்களில் பூட்டுஅடையாளம் இருக்கவேண்டும்.



20. செக் பாயிண்ட்டின் புதிய சோன் அலார் ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுக்காப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை  தருகின்றது.

பிரவுசருக்கும் உங்கள் கணினியில் அது ஏற்ப்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகின்றது .



21. நம்மை பற்றிய தகவல் மற்றும் நம்முடைய புகைப்படங்கள் ஆகியவற்றை இணையத்தில் நிரந்தரமாக உறுதியற்ற தளங்களில்  தரவேண்டாம் . இதற்கென உள்ள தற்காலிக (www.10minutemail.com ) இமெயில் மூலம் பயன்படுத்தவும்.



22. பிரவுசிங் சென்டர் மற்றும் அலுவலகங்களில் கணினியை பயன்படுத்தும் போது உங்கள் தளங்களிலிருந்து வெளியேறும்  போது முழுமையாக Sign out செய்துவிட்டு வெளியேறவும். இல்லையெனில் உங்கள் தளங்களை தவறாக பயன்படுத்த வழியுண்டு.



23. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரிகளை நமக்கு நெருங்கிய தோழர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் தரவும். மற்றவைகளுக்கு தற்காலிக இமெயில் முகவரியினை தரவும். இது நமக்கு மிகவும் பாதுக்காப்பானது ஆகும்.



24. நம்மை பற்றிய தகவல் மற்றும் முகவரியினை அறிய ஸ்பேம் மெயில்களாக  தருவார்கள் . அதனை நாம் கணினியிலிருந்து நிரந்திரமாக நீக்கிவிடவேண்டும். இல்லையெனில் நமது தகவல்கள் அனைத்தும் திருடப்படும்.



25.இமெயில்களை  ஸ்பேம்  பில்டர்களை கொண்டு பயன்படுத்தவும் . அப்பொழுதுதான் நமக்கு வரும் தகவல்களை ஆராய்ந்து அவை ஸ்பேம் மெய்லா அல்லது சரியானதா என்பதை கண்டறிந்து ஸ்பேம் ஏதேனும் இருப்பின் அழிகின்றது.

 


 
இவ்வாறு நாம் கணினியை பயன்படுத்தும் போது உரிய பாதுகாப்புடனும் மற்றும் எச்சரிக்கையுடனும் இருக்க முடியும். மேலும்  இப்பாதுகாப்பு முறையினால் வைரஸ் மற்றும் கணினி தகவல் திருடர்களிடமிருந்து பாதுகாப்புடன் இணையத்தில் உலவ  முடியும்.

No comments:

Post a Comment