Tuesday, January 14, 2014

Linux ன் Ubuntuவை Pen Drive மூலம் இன்ஸ்டால் செய்வது எப்படி?

Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating
System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர்
விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் மூலம்
இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் கணினியில் Ubuntu OS-இன் ISO File இருப்பதை உறுதி செய்து
கொள்ளவும். அல்லது இங்கே டவுன்லோட் செய்து கொள்ளவும். Ubuntu 12.04 LTS
32 bit
அடுத்து உங்கள் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகி விடுங்கள். இப்போது
Pen Drive Linux's USB Installer என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து
கொள்ளவும்.
இதை Run செய்யும் போது Step-1 இல் எந்த OS என்று கேட்கும், உங்கள்
கணினியில் ஏற்கனவே நீங்கள் டவுன்லோட் செய்துள்ள Ubuntu Version-ஐ இதில்
நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

அடுத்து நீங்கள் தெரிவு செய்த OS உங்கள் கணினியில் எங்கு உள்ளது என்று
Step-2 மூலம் தெரிவு செய்ய வேண்டும்.
Step-3 யில் உங்கள் பென் டிரைவை தெரிவு செய்ய வேண்டும். [Pen Drive க்கு
என்ன லெட்டர் என்று பார்த்து தெரிவு செய்யவும்]
Step- 4 தேவை இல்லை.

இப்போது Create என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவே சிறிது நேரத்தில்
நீங்கள் Process முடிந்த பின், நீங்கள் டவுன்லோட் செய்த Ubuntu-வை உங்கள்
Pen Drive மூலம் மூலம் இன்ஸ்டால் செய்து விடலாம்.
USB மூலம் Boot ஆகவில்லை என்றால், கணினி ஆன் ஆகும் போது [Press F2 For
BIOS எனும்போது ] F12 என்பதை அழுத்தவும். இப்போது Boot Menu வரும் அதில்
"USB Boot" என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

இப்போது பென் டிரைவ் உங்கள் கணினியில் செருகி இருக்க வேண்டும். இனி
இன்ஸ்டால் ஆகி விடும்.
Read more »

Tuesday, January 7, 2014

ஆங்கில மருத்துவர் நமக்கு கொடுத்திருக்கும் மருந்து ( drug ) சரிதானா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.

என்ன நோய் என்று போனாலும் மருத்துவர் அதிகப்படியான மாத்திரைகளை
கொடுக்கிறார் இவர் கொடுக்கும் மாத்திரை மருந்து ( drug ) சரிதானா என்று
எப்படி கண்டுபிடிப்பது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

2 ரூபாய் மாத்திரையே போதும் ஆனால் மருத்துவர் 50 ரூபாய்க்கான மாத்திரையை
கொடுத்திருக்கிறாரே இதன் காரணம் என்ன என்பதை உங்களுக்கு மருத்துவர்
விவரிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம் எளிதாக ஆன்லைன் மூலம் நமக்கு
கொடுத்திருக்கும் மருந்து சரிதானா என்பதை சோதிக்கவே இத்தளம் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://www.drugcite.com/

இத்தளத்திற்கு சென்று நாம் நமக்கு கொடுத்திருக்கும் மாத்திரை ( drug )
அல்லது டானிக் சரியானது தானா எந்த வயதில் உள்ளவர்கள் எப்படி சாப்பிட
வேண்டும் இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது முதல் ,
இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் அனைத்துவிதமான
தகவல்களையும் துல்லியமாக எடுத்துக்கூறுகிறது. பெரிய நிறுவனங்களின் வேலை
பார்க்கும் நபர்கள் தங்களுக்கு நேரம் இல்லாத காரணத்தினால் அவர்கள்
கொடுக்கும் மருந்தை அப்படியே சாப்பிடுகின்றனர், ஆனால் இனி அவர்கள்
கொடுத்திருக்கும் மருந்தை இத்தளத்தில்
இருக்கும் தேடுதல் கட்டத்திற்குள் கொடுத்து தேடினால் மேலும் விரிவாக
தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.

மறக்காம ஷேர் பண்ணுங்க.....
Read more »

Friday, January 3, 2014

உலகின் அதிவேக ‘சூப்பர் கணினி’ அறிமுகம்



ஜூன் 24- உலகின் அதி வேக சூப்பர் கணினியை சீனா உருவாக்கி உள்ளது.
மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த சூப்பர் கணினியை உருவாக்கியுள்ளனர்.
tianhe-2-jack-dongarra-pdfடியானி 2(Tianhe 2) என பெயரிடப்பட்டுள்ள இந்த கணினியின் வேகம் நொடிக்கு 33.86 பெடாஃப்லாப்(Petaflap) ஆகும்.
அதாவது நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தது.
Tianhe_2594189bமனிதனை விண்வெளிக்கு அனுப்புவது, சந்திரன் போன்ற மற்ற கிரகங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட மிகப்பெரிய அளவிலான அறிவியல் திட்டங்களைச் செயல்படுத்த இந்த சூப்பர்  கணினி உதவும்.
மேலும் இந்த கணினியை கொண்டு மிக கடினமாக கணக்குகளை கூட துல்லியமாக செய்து முடிக்கலாம்.
இதுவரையிலும் அமெரிக்க எரிசக்தி அமைச்சகத்தின் தயாரிப்பான டைட்டன் என்ற  கணினிதான் உலகின் அதிவேக சூப்பர் கணினியாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Read more »

Thursday, January 2, 2014

இன்றைய உலகம் இவர்களால்

இன்றைய உலகை கணினியே ஆள்கிறது. காய்கறி விறபனைகூட கணினியால்தான். மனித இன வளர்ச்சியில் தாம்ஸ் ஆல்வா எடிசன் தந்த மின்சாரம் முதல் மாற்றத்தைத் தந்தது. அதனையொற்றியே உலகம் இயங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு தொழிற்புரட்சி நடந்தது. இதற்கடுத்தாற்போல மின்னணு சாதனங்கள் உருவாயின. இதன் உச்சமாக இன்று உலகமே கணினிமயமாகிவிட்டது. இந்தத் தொழில் நுட்பத்தை கைக்கொண்டு சாதனை படைத்தவர் களாகவும், இன்றைய உலகில் தவிர்க்க முடியாத, தெரிந்து கொள்ளவேண்டியவர்களாவும் இருக்கிற சிலரைப் பார்க்கலாம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs)
ஆப்பிள் கணினி நிறுவனர்களுள் ஒருவர். மிகச் சிறிய அளவில், கைகளில் எளிதாக வைத்துக் கொள்ளும் வகையில் ஆப்பிள் அய் போன் (iPhone), அய் போட் (iPod), அய் பேட் (iPad) ஆகியவற்றை உருவாக்கியவர். கணினித் தொழிலில் இவரது இந்தத் தயாரிப்புகள்தான் இன்று உலகச் சந்தையில் பல்லாயிரம் கோடிப் பணத்தை அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கிறது.
1955 பிப்ரவரி 24ல் அமெரிக்காவின் சான் பிராசிஸ்கோவில் பிறந்த இவர் கடந்த ஆண்டு (2011) அக்டோபர் 5ல் மறைந்தார். இவர் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
பில் கேட்ஸ் (Bill Gates)
மைக்ரோ சாஃப்ட் கணினி நிறுவனத்தை நிறுவியவர். உலகெங்கும் பல கோடிக்கணக்கான இல்லங்கள், அலுவலகங் களில் இவரது கணினிகள் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 1995லிருந்து 2007 வரை உலகின் முதல் பணக்காரராக இருந்தவர். (இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார்) தற்போது அந்நிறுவனத்தின் 8 சதவீதப் பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டு செயல்படாத நிர்வாகியாக உள்ளார்.
தனது வருமானத்தை உலகம் முழுதும் உள்ள பல அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்துவருகிறார். குறிப்பாக போலியோ ஒழிப்பில் ஈடுபட்டுவரும் ரோட்டரி அமைப்பிற்கு உதவிவருகிறார். 1955 அக்டோபர் 28ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சீட்டல் நகரில் பிறந்த பில் கேட்ஸ், தற்போது வாஷிங்டன் அருகில் உள்ள மெடினாவில் வாழ்ந்துவருகிறார்.
லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds)
மைக்ரோ சாஃட் கணினி போலவே இன் னொரு கணினி லினக்ஸ் (LINUX). இந்தக் கணினியின் மூல மென்பொருளை, பயன்படுத்துவோர் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக வெளிப்படையாக அளித்து கணினி அறிவை வளர்க்கும் முயற்சிக்கு வித்திட்டவர்.
தற்போது உலகெங்கும் விரைந்து விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு (Android) கையடக்கக் கணினி இவரது புதிய படைப்பு. கூகுள் இணைய வசதியை உள்ளடக்கி எந்த இடத்திலும் இணையத்தைப் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. 1969 டிசம்பர் 28 ல் பின்லாந்தின் ஹெல்சின்கியில் பிறந்த லினஸ் டோர்வால்ட்ஸ், தற்போது அமெரிக்கா, ஓரிகான் மாநிலம், போர்ட்லாந்தில் வாழ்ந்துவருகிறார்.
டிம் பெர்னெர்ஸ் லீ (Tim Berners Lee)
வலைத்தளத்தின் மூலம் உலகையே இணைத்தவர் இவர்தான். இன்று இணைய தள முகவரிக்கு முன்னால் WWW என்பதைச் சேர்க்கிறோமே, அந்த WORLD WIDE WEB -அய் கண்டுபிடித்தவர் டிம் பெர்னெர்ஸ் லீ. இங்கிலாந்தைச் சேர்ந்த கணினிப் பொறியாளரான லீ உலகின் முதல் கணினி இணைய உலாவியையும் (web browser), கணினி இணையப் பரிமாற்றகத்தையும் (web server) 21 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கினார். 1955ல் லண்டனில் பிறந்த இவர் தற்போது அமெரிக்காவின் மாசாச்சுடெட்சில் வாழ்கிறார்.
லேரி பேஜ் (Larry Page) - செர்ஜி பிரின் (Sergey Brin)
உலகில் அதிகமானவர்களால் பயன் படுத்தப்படும் GOOGLE தேடுபொறியை இந்த இருவரும் இணைந்து உருவாக்கினார்கள். எந்தப் பொருள் குறித்தும் அறிய இன்று அனைவரும் கூகுள் இணையத் தேடுபொறித் தளத்தைத்தான் அணுகுகின்றனர். 1973 மார்ச் 26ல் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம்,லேன்சனில் பிறந்தவர் லேரி பேஜ். தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா, பாலோ அட்டோவில் வாழ்கிறார்.
1973 ஆகஸ்ட் 21ல் அன்றைய சோவியத் யூனியனின் (ரஷ்யா) மாஸ்கோவில் பிறந்தவர் செர்ஜி பிரின். இவர் தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலம் லாஸ் அல்டோவில் வாழ்கிறார்.
இவான் வில்லியம்ஸ் (Evan Williams)
இன்று கணினியில் விரல் பதித்தவுடனேயே முதல் கணக்குத் திறப்பது சமூக இணைய தளங்களில்தான். அவற்றில் முன்னணியில் உள்ள Twitter என்ற சமூக உரையாடல் இணைய தளத்தையும், Blogger என்ற கருத்துத் தளத்தையும் உருவாக்கியவர் இவான் வில்லியம்ஸ். 1972 மார்ச் 31ல் அமெரிக்காவின், நெப்ரஸ்கா க்ளார்க்ஸ்சில் பிறந்த இவர் தற்போது அங்குள்ள கலிபோர்னியா, சான் பிரான்சிஸ் கோவில் வாழ்கிறார். தனிமனிதர்களின் உணர்வுகள், எண்ணங்கள், கருத்துகளை வெளிப்படுத்தும் மிகப்பெரிய தளமாக இவர் உருவாக்கிய இணையதளங்கள் உள்ளன.
மார்க் ஜக்கர்பெர்க் (Mark Zuckerberg)
இன்றைய உலகின் மிக அதிகமானவர்கள் பேசிப் பழகும் முதன்மையான சமூக இணையதளமான Facebook (முகநூல்)_அய் உருவாக்கியவர் இந்த 28 வயது இளைஞர். அமெரிக்கா வின் நியூயார்க், ஒயிட் பிலைன்சில் 1984 மே 14 ல் பிறந்த மார்க் ஜக்கர்பெர்க், இன்று உலகின் இளம் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த இவர், தனது படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் தனியே முயன்று Facebook தளத்தை உருவாக்கியுள்ளார்.
Read more »

Wednesday, January 1, 2014

கணினி உலகம் காணப்போகும் மாறுதல்கள்

கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவில், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் அடிப்படையில், இனி என்ன மாறுதல்கள் மற்றும் தொழில் நுட்ப யுக்திகள் வரும் ஆண்டில் கிடைக்கும் என இங்கு பார்க்கலாம்.
1.டி.டி.4 மெமரி (DD4 MEMORY): இன்று வரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் டி.டி.ஆர்.3 மெமரியின் இடத்தில் புதியதாக ஒன்று இடம் பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஏனென்றால், டி.டி.ஆர். 3 பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டி.டி.ஆர். 4 மெமரி, தயாராக இருந்தாலும், எப்போது அது சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என்பதனைச் சரியாகக் கூற இயலவில்லை. வர இருக்கும் இன்டெல் நிறுவனத்தின் ப்ராட்வெல் அல்லது ஹேஸ்வெல் இ- சி.பி.யு. ஆகியவற்றுடன் இணைந்து இது வெளியாகலாம். அப்படி என்ன முன்னேற்றம் இந்த டி.டி.ஆர். 4 மெமரியில் கிடைக்கும் என்ற @கள்வி எழுகிறதா? தயாரிப்பாளர்கள், அதிகமான மெமரி மாட்யூல்களை இதன் மெமரி ஸ்டிக்குகளில் அமைக்கலாம். மேலும், இவை குறைந்த மின் சக்தியில், அதிக வேகத்தில் இயங்கும். இதில் இயங்கும் சி.பி.யு.க்கள், டி.டி.ஆர். 3 யுடனும் இணைந்து இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. யு.எஸ்.பி. 3.1 (USB3.1): யு.எஸ்.பி. 3 ஏற்கனவே வந்துவிட்டது. இருப்பினும், இதில் மாற்றப்பட்ட அம்சங்கள் இணைக்கப்பட்டு, ஒரு புதிய வகை வர உள்ளது. யு.எஸ்.பி.3ன் அலைக்கற்றையை இரு மடங்காக ஆக்கி இயக்கும் திறனுடன் இது அமைக்கப்படும். எனவே நொடியில் 5 கிகா பிட்ஸ் டேட்டா வேகம் என்பது 10 கிகா பிட்ஸ் ஆக இருக்கும். அண்மையில் இதனைச் சோதனை செய்த போது, நொடிக்கு 800 எம்.பி. டேட்டா பரிமாற்றத்தினைக் காட்டியது. இது விரைவில் நொடிக்கு ஒரு கிகா பைட் என்ற அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
suran
3. சட்டா எக்ஸ்ப்ரஸ் ஸ்டோரேஜ் (SATA EXPRESS STORAGE): சாலிட் ஸ்டேட் ட்ரைவ்கள் ஏற்கனவே SATA 6 வரையறையை எட்டி விட்டன. வர இருக்கும் SATA EXPRESS, ஒரு நொடியில் 1.4 கிகா பைட் டேட்டா பரிமாற்றத்தை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
சட்டா எக்ஸ்பிரஸ் ட்ரைவ்கள் வழக்கமான 2.5 அல்லது 3.5 அங்குல அளவில் இருக்காது. புதிய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் காணப்படுவது போல M.2 பார்ம் பேக்டர் அளவில் இருக்கும். அப்படியானால், மெக்கானிகல் ட்ரைவ் இனி இல்லாமல் போய்விடுமா? எஸ்.எஸ்.டி. டிஸ்க்குகளின் விலை மிக மலிவாகக் குறையும் வரை, மெக்கானிக்கல் டிஸ்க்குகள் புழக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், SATA Express இன்டர்பேஸ் குறித்து அறிந்த பயனாளர்கள், நிச்சயம் மெக்கானிகல் ட்ரைவிற்கு விடை கொடுக்கத் தயங்க மாட்டார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால், புதிய சட்டா எக்ஸ்பிரஸ், அதிவேக எக்ஸ்பிரஸ் ஆக ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா பரிமாற்றத்தை மேற்கொள்கிறது.
4. ஜி-ஸிங்க் மானிட்டர்கள் (GSync MONITORS): ஜி-ஸிங்க் என்பது, என்வீடியாவின் (NVIDIA) புதிய தொழில் நுட்பமாகும். மானிட்டர் ஒன்றில் ஜி.பி.யு.வினை இணைத்துச் செயல்படுத்துவதே இந்த தொழில் நுட்பம். இதனால், மானிட்டர் தன் திறனை இழக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. என்றும் அது இயங்கும். இதனால், கம்ப்யூட்டர் கேம்ஸ் இயக்கத்திற்கு இது மாபெரும் துணையாக இருக்கும். அசூஸ் நிறுவனம், வரும் 2014 ஆம் ஆண்டில் வெளியிட இருக்கும் மானிட்டர்களில் ஜி-ஸிங்க் தொழில் நுட்பத்துடன் இருக்கும் என அறிவித்துள்ளது. VG248QE என்ற மாடல் மானிட்டர் விலை 400 டாலர் அளவில் இருக்கும். 
suran
5. தொலைக் காட்சியை விஞ்சும் இணையம்: வரும் காலத்தில், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை, இணையம் வழியே அனைவரும் காணத் தொடங்கிவிடுவார்கள். இதனால், தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்பாடு குறையும். ரேடியோ நிலைய ஒலிபரப்பு வெளிநாடுகளில், இணையம் வழியாகத்தான் பல ஆண்டுகளாகப் பெறப்பட்டு வருகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் வேகமாக, இணையம் வழி தொலைக் காட்சி நிகழ்வுகள் பார்ப்பது வளரும் என்று உறுதியாக நம்பலாம்.

6. கூகுள் கிளாஸ் பயன்பாடு: கூகுள் கிளாஸ் எனப்படும், தலையில் அணிந்து பயன்படுத்தும் கம்ப்யூட்டர், வரும் ஆண்டில் வேகமாக மக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தை, கைகளின் பயன்பாடு இல்லாமல், இதன் வழி அணுக முடியும். இது, வழக்கமாக நாம் கண்களில் அணியும் கண்ணாடி போலத்தான் வடிவத்தில் உள்ளது. கண்ணாடியில் உள்ள லென்ஸுக்குப் பதிலாக, சிறிய எலக்ட்ரானிக் திரை உள்ளது. இது, நம் சொல் ஒலிப்பிற்குக் கட்டுப்பட்டு இயங்கும் வகையில் உள்ளது. அத்துடன் கண் சிமிட்டலையும் கட்டளையாக ஏற்று இயங்குகிறது. 
கண்ணாடியின் பக்கவாட்டுப் பிரேமில் ஆடியோ அவுட்புட் மற்றும் டச் கண்ட்ரோல் பேட் அமைக்கப்பட்டுள்ளது. மேலாக போட்டோ மற்றும் வீடியோ பதிவதற்கு பட்டன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதற்கான கேமரா இதில் இணைக்கப்பட்டுள்ளது. சென்ற 2013 ஆம் ஆண்டில் இது சாப்ட்வேர் தயாரிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. 2014ல் இது பரவலாக மக்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக அணியும் கண் குளிர் கண்ணாடிகளைக் காட்டிலும் எடை குறைவாக உள்ளது. 2012ல் இது பற்றிய தகவல்களை கூகுள் வெளியிட்ட போது, விளம்பரத்தை நம் மீது திணிக்க கூகுள் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது போல் எதுவும் இல்லை என கூகுள் அறிவித்துள்ளது. 
2014ல் ஆப்பிள் நிறுவனம்: ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்குப் பின்னர், ஆப்பிள் நிறுவனம் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தொடர்ந்து தன் வழக்கமான சுறுசுறுப்பினை ஆப்பிள் நிரூபித்துக் கொண்டுள்ளது. வரும் 2014ல், இதன் தாக்கம் அதிகமாகவே டிஜிட்டல் உலகில் எதிர்பார்க்கப்படுகிறது.
suran
 2013ன் இறுதி காலாண்டில், இதன் பங்கு விலை எகிறியது. இதற்குக் காரணம் ஐபேட் ஏர், ஐ பேட் மினி மற்றும் ஐபோன் 5 எஸ் விற்பனை எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாகவே இருந்ததாகும். 2013ல், ஏற்கனவே இருந்த சாதனங்களை அப்டேட் செய்தே ஆப்பிள் புதிய சாதனங்களை வெளியிட்டது. ஆனால், வரும் ஆண்டில் முற்றிலும் புதிய வடிவமைப்புகள் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஐ வாட்ச் (iWatch) புதிய வடிவமைப்பில், நவீன தொழில் நுட்பத்துடன் வெளி வரலாம்.

சாம்சங் தன் போன்களில் 4 முதல் 10 அங்குல அளவில் டிஸ்பிளே திரைகளைக் கொண்டு வந்துள்ள நிலையில், ஆப்பிள் இன்னும் சிறிய அளவிலேயே திரைகளைக் கொண்டு தன் போன்களை வடிவமைத்து வருகிறது.
 இது வரும் ஆண்டில் மாறலாம்.
 ஆப்பிள் நிறுவனமும் பெரிய திரைகளுடன், தன் போன்களைக் கொண்டு வரும்.

மேலும், 2013 இறுதியில், ஆப்பிள், ப்ரைம் சென்ஸ் (Primesense) என்னும் நிறுவனத்தை தனதாக்கிக் கொண்டது. 

இது அசைவுகளின் அடிப்படையிலான தொழில் நுட்பத்திற்குப் பெயர் பெற்றது.
 இதனால், வரும் ஆண்டில், ஆப்பிள் இந்த தொழில் நுட்பத்தினைத் தன் சாதனங்களில் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

Read more »