Friday, March 22, 2013

மென்பொருள் உதவி இல்லாமல் இரகசிய தகவல்களை மறைக்கலாம் வாங்க....


இதுவரை நாம் நமது இரகசிய தகவல்களை மறைக்க பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தி உள்ளோம் .
முதன் முறையாக மென்பொருள் உதவி இல்லாமல் எப்படி தகவல்களை மறைத்து வைக்கலாம் எனப் பார்ப்போம்.
கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம்தான். இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.

இதற்கு முதலில் Start->Run->cmd கிளிக் செய்யவும். இப்போது (CMD) command Prompt ஓபன் ஆகும். இதில் C:Documents and Settingscontent இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc) இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும்.
இப்போது D:/>attrib +h +s Folder Name (Folder Name ->மறைக்க வேண்டிய Folder Name). அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும். தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க, D:/>attrib -h -s Folder Name கொடுத்தால் போதும். இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.

அடுத்து என்ன உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்களேன் பார்ப்போம்.......... 

No comments:

Post a Comment