Friday, October 26, 2012

ஈராக் அதிபர் சதாம்

                           ஈராக் அதிபர் சதாம்    


                அந்த தியாகத்தை நினைவு கூறுவோம் !


அரபுலகின் ஆண்மையுள்ள ஆட்சியாளர்களில் ஒருவரான சதாம் ஹுசைனை முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் ஈதுல் அல்ஹா (தியாகத்திருநாள் )அன்று அமெரிக்க எடுபிடிகள் தூக்கிலிட்டுக் கொன்றுள்ளனர்.

ஈராக் அதிபர் சதாம் என்னதான் 
கொடுரமானவராக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களும் நியாயவான்களும் சதாமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனன அநீதியானது என்றே கருதுகின்றனர். குறிப்பாக அமெரிக்க மக்கள், இதற்குக் காரணமான கயாவளி ஜார்ஜ் புஷ்ஷின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைக் காட்டும் விதமாக சென்ற  தேர்தலில் செருப்பால் அடிப்பதற்குப் பதில் ஓட்டால் அடித்து நிரூபித்தார்கள்.


முஸ்லிம்கள் சந்தோஷமாக இருக்கும் திருநாளில் தன் எடுபிடிகள் மூலம் கொடூர சர்வாதிகார வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ள ஜார்ஜ் புஷ், சதாம் பதுங்கு குழியில் இருந்தபோதும், அமெரிக்க எடுபிடிகளின் நீதிமன்றக் காவலில் இருந்த போதும், (அமெரிக்காவின்) அடக்குமுறைக்கும் ஆணவத்திற்கும் அடிபணியாது இறைவனை மட்டுமே நம்பும் தியாகிகளின் பேறு பெற்றுள்ளார். இறைவனை மறந்து ஆட்சி செய்யும் ஆட்சியாளார்கள், இறைவனை உணர செலுத்த வேண்டியவை எப்படியெல்லாம் இருக்கும் என்பதற்கு சதாமின் சகாப்தம் ஒரு நிகழ்கால உதாரணம்.

சதாம் ஹுசைனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, "அவர் ஆட்சியில் மறுக்கப்பட்டிருந்த நீதிகளின் ஒரு பகுதியே" என்று திருவாய் மலர்ந்த உலக மகாக் கோழை ஜார்ஜ் புஷ் இன்று சதாம் தூக்கிலிடப்பட்டதற்கு கருத்து தெரிவிக்கும் போது, "சதாமை நீதியின் முன் கொண்டு வருவதன் மூலம் ஈராக்கில் நடக்கும் வன்முறைகள் முடிவுக்கு வராது; எனினும் இது நிலையான மற்றும் சுயபாதுகாப்புள்ள ஈராக்கை ஜனநாயகம் ஆள்வதற்கான பாதையின் முக்கியமான மைல்கல்" என்றார்
இன்னொரு பக்கம் உலகத் தலைவர்கள் கோழைத்தனமான இத்தண்டனையைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளனர். (அதற்கு மட்டும்தானே இவர்கள் இருக்கிறார்கள்).

சர்வாதிகாரி, கொடூர கொலைகாரன் என்று சொல்லப்பட்ட சதாமின் ஆட்சிக்காலத்தில் ஈராக்கியர்கள் பெற்று வந்த அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை, ஜனநாயக உலகின் காவலர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க ஆட்சியார்களால் இழந்துள்ளனர். இந்தவகையில் சதாம் ஹுசைன் புஷ்ஷ விட பலமடங்கு உயர்ந்து நிற்கிறார்.
தன்னைக் கொல்ல திட்டமிட்ட 148 சூழ்ச்சியாளர்களைக் கொன்ற சதாமுக்கு ஈராக்கின் சட்டத்தின்படி மரன தண்டனை என்றால், 600,000 க்கும் அதிகமான அப்பாவிகளைக் கொல்லக் காரணமான புஷ்ஷூக்கு என்ன தண்டனை காத்திருக்கிறது?

"நீங்கள் (ஈராக் மக்கள்) நிம்மதியாக தூங்குங்கள். நான் உங்களுக்காக தூங்காமல் இருக்கிறேன்." என்று 2003, ஜனவரி 20 அன்று சொன்ன சதாம் ஹுசைன் இன்று () கொடூரர்களின் சதியால் ஈராக் மக்கள் நிம்மதியாகத் தூங்காமல் தவிக்க விட்டுச் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment