இன்றைய உலகை கணினியே ஆள்கிறது. காய்கறி விறபனைகூட கணினியால்தான். மனித இன வளர்ச்சியில் தாம்ஸ் ஆல்வா எடிசன் தந்த மின்சாரம் முதல் மாற்றத்தைத் தந்தது. அதனையொற்றியே உலகம் இயங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு தொழிற்புரட்சி நடந்தது. இதற்கடுத்தாற்போல மின்னணு சாதனங்கள் உருவாயின. இதன் உச்சமாக இன்று உலகமே கணினிமயமாகிவிட்டது. இந்தத் தொழில் நுட்பத்தை கைக்கொண்டு சாதனை படைத்தவர் களாகவும், இன்றைய உலகில் தவிர்க்க முடியாத, தெரிந்து கொள்ளவேண்டியவர்களாவும் இருக்கிற சிலரைப் பார்க்கலாம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs)
ஆப்பிள் கணினி நிறுவனர்களுள் ஒருவர். மிகச் சிறிய அளவில், கைகளில் எளிதாக வைத்துக் கொள்ளும் வகையில் ஆப்பிள் அய் போன் (iPhone), அய் போட் (iPod), அய் பேட் (iPad) ஆகியவற்றை உருவாக்கியவர். கணினித் தொழிலில் இவரது இந்தத் தயாரிப்புகள்தான் இன்று உலகச் சந்தையில் பல்லாயிரம் கோடிப் பணத்தை அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கிறது.
1955 பிப்ரவரி 24ல் அமெரிக்காவின் சான் பிராசிஸ்கோவில் பிறந்த இவர் கடந்த ஆண்டு (2011) அக்டோபர் 5ல் மறைந்தார். இவர் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
பில் கேட்ஸ் (Bill Gates)
மைக்ரோ சாஃப்ட் கணினி நிறுவனத்தை நிறுவியவர். உலகெங்கும் பல கோடிக்கணக்கான இல்லங்கள், அலுவலகங் களில் இவரது கணினிகள் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 1995லிருந்து 2007 வரை உலகின் முதல் பணக்காரராக இருந்தவர். (இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார்) தற்போது அந்நிறுவனத்தின் 8 சதவீதப் பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டு செயல்படாத நிர்வாகியாக உள்ளார்.
தனது வருமானத்தை உலகம் முழுதும் உள்ள பல அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்துவருகிறார். குறிப்பாக போலியோ ஒழிப்பில் ஈடுபட்டுவரும் ரோட்டரி அமைப்பிற்கு உதவிவருகிறார். 1955 அக்டோபர் 28ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சீட்டல் நகரில் பிறந்த பில் கேட்ஸ், தற்போது வாஷிங்டன் அருகில் உள்ள மெடினாவில் வாழ்ந்துவருகிறார்.
லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds)
மைக்ரோ சாஃட் கணினி போலவே இன் னொரு கணினி லினக்ஸ் (LINUX). இந்தக் கணினியின் மூல மென்பொருளை, பயன்படுத்துவோர் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக வெளிப்படையாக அளித்து கணினி அறிவை வளர்க்கும் முயற்சிக்கு வித்திட்டவர்.
தற்போது உலகெங்கும் விரைந்து விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு (Android) கையடக்கக் கணினி இவரது புதிய படைப்பு. கூகுள் இணைய வசதியை உள்ளடக்கி எந்த இடத்திலும் இணையத்தைப் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. 1969 டிசம்பர் 28 ல் பின்லாந்தின் ஹெல்சின்கியில் பிறந்த லினஸ் டோர்வால்ட்ஸ், தற்போது அமெரிக்கா, ஓரிகான் மாநிலம், போர்ட்லாந்தில் வாழ்ந்துவருகிறார்.
டிம் பெர்னெர்ஸ் லீ (Tim Berners Lee)
வலைத்தளத்தின் மூலம் உலகையே இணைத்தவர் இவர்தான். இன்று இணைய தள முகவரிக்கு முன்னால் WWW என்பதைச் சேர்க்கிறோமே, அந்த WORLD WIDE WEB -அய் கண்டுபிடித்தவர் டிம் பெர்னெர்ஸ் லீ. இங்கிலாந்தைச் சேர்ந்த கணினிப் பொறியாளரான லீ உலகின் முதல் கணினி இணைய உலாவியையும் (web browser), கணினி இணையப் பரிமாற்றகத்தையும் (web server) 21 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கினார். 1955ல் லண்டனில் பிறந்த இவர் தற்போது அமெரிக்காவின் மாசாச்சுடெட்சில் வாழ்கிறார்.
லேரி பேஜ் (Larry Page) - செர்ஜி பிரின் (Sergey Brin)
உலகில் அதிகமானவர்களால் பயன் படுத்தப்படும் GOOGLE தேடுபொறியை இந்த இருவரும் இணைந்து உருவாக்கினார்கள். எந்தப் பொருள் குறித்தும் அறிய இன்று அனைவரும் கூகுள் இணையத் தேடுபொறித் தளத்தைத்தான் அணுகுகின்றனர். 1973 மார்ச் 26ல் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம்,லேன்சனில் பிறந்தவர் லேரி பேஜ். தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா, பாலோ அட்டோவில் வாழ்கிறார்.
1973 ஆகஸ்ட் 21ல் அன்றைய சோவியத் யூனியனின் (ரஷ்யா) மாஸ்கோவில் பிறந்தவர் செர்ஜி பிரின். இவர் தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலம் லாஸ் அல்டோவில் வாழ்கிறார்.
இவான் வில்லியம்ஸ் (Evan Williams)
இன்று கணினியில் விரல் பதித்தவுடனேயே முதல் கணக்குத் திறப்பது சமூக இணைய தளங்களில்தான். அவற்றில் முன்னணியில் உள்ள Twitter என்ற சமூக உரையாடல் இணைய தளத்தையும், Blogger என்ற கருத்துத் தளத்தையும் உருவாக்கியவர் இவான் வில்லியம்ஸ். 1972 மார்ச் 31ல் அமெரிக்காவின், நெப்ரஸ்கா க்ளார்க்ஸ்சில் பிறந்த இவர் தற்போது அங்குள்ள கலிபோர்னியா, சான் பிரான்சிஸ் கோவில் வாழ்கிறார். தனிமனிதர்களின் உணர்வுகள், எண்ணங்கள், கருத்துகளை வெளிப்படுத்தும் மிகப்பெரிய தளமாக இவர் உருவாக்கிய இணையதளங்கள் உள்ளன.
மார்க் ஜக்கர்பெர்க் (Mark Zuckerberg)
இன்றைய உலகின் மிக அதிகமானவர்கள் பேசிப் பழகும் முதன்மையான சமூக இணையதளமான Facebook (முகநூல்)_அய் உருவாக்கியவர் இந்த 28 வயது இளைஞர். அமெரிக்கா வின் நியூயார்க், ஒயிட் பிலைன்சில் 1984 மே 14 ல் பிறந்த மார்க் ஜக்கர்பெர்க், இன்று உலகின் இளம் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த இவர், தனது படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் தனியே முயன்று Facebook தளத்தை உருவாக்கியுள்ளார்.
No comments:
Post a Comment