Saturday, September 7, 2013

காகிதம் போன்ற அளவில் விசைப் பலகை!



hqdefaultசெப்டம்பர் 7 – இன்றைக்கு கணினிகளில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இணைக்கப்படுவது கீ போர்ட் எனப்படும் விசைப் பலகை. விசைப் பலகை இல்லாமல் கணினியைப் பயன்படுத்துவது என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும்.
இருப்பினும், கணினியும் நவீனமயமாக்கப்பட்டதில் விசைப்பலகை இல்லாமல் கணினியை இயக்குவது தற்போது சாத்தியமாகியுள்ளது. முதல் கட்டமாக விரல் நுனியில் விசையொன்றை அசைப்பதன் மூலம் கணினியை இயக்கும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், தற்போது செல்பேசிகளிலும், தட்டைக் கருவிகளிலும் (tablets) தொடு விசை எனப்படும் touch screen தொழில் நுட்பம் புகுத்தப்பட்டு, விசைப் பலகையின் பயன்பாடு தேவையில்லாத ஒன்றாகிவிட்டது.
சிஎஸ்ஆர் என்னும் நிறுவனம் இப்போது 0.5 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட, காகிதம் போன்ற அளவில் இருக்கும் கம்பித் தொடர்பில்லாத, மடக்கக் கூடிய தாள் போன்ற விசைப் பலகையைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த விசைப் பலகையை தட்டைக் கருவிகள் மற்றும் மேசைக் கணினிகளுடன் இணைத்துக் கொண்டு எந்த இடத்திலும் பயன்படுத்தலாம். கையோடு மற்ற இடங்களுக்கும் வெகு சுலபமாக எடுத்துச் செல்லலாம்.
இது தொடர்பான காணொளியை கீழ்க்காணும் இணைப்பை அழுத்துவதன் மூலம் காணலாம்;

No comments:

Post a Comment