உங்களுக்கு வரும் இமெயில்களை SMS ஆக பெறலாம். நீங்கள் செட் செய்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் அனைத்து புதிய மின்னஞ்சல்களும் உடனுக்குடன் SMS ஆக உங்கள் மொபைலை வந்தடையும்.
ஜிமெயிலில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை எஸ்.எம்.எஸ். ஆக பெறும் வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
நீங்கள் ஒரு ஜிமெயில் பயனாளர் எனில் உங்களுடைய செல்போனுக்கே புதிய இமெயில் செய்தியை SMS ஆக பெற முடியும். உங்களுக்கு வரும் முக்கியமான மின்னஞ்சல்களை (நீங்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து) மட்டும் SMS மூலம் பெறும் வழிமுறைகளைப் பார்ப்போம்.
செட்டிங்ஸ் 1:
- உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழைந்து (login) கொள்ளுங்கள்
- செட்டிங்ஸ் ஐகானை அழுத்தி Settings செல்லுங்கள்..
- செட்டிங்ஸ் பகுதி திறந்ததும் லேபிள் செல்லுங்கள். sendsms என்ற புதிய லேபிள் ஒன்றை உருவாக்குங்கள்.
- அடுத்து "பில்டர்" Filter அழுத்தி புதிய பில்டர் (Create)ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதற்கு,
- பில்டர் படிவத்தில் இரண்டு முக்கியமான விடயங்களைச் செய்ய வேண்டும்.
- பிறகு அப்ளை தி லேபிள் (apply the label) என்பதை டிக் மார்க் ஏற்படுத்திக்கொண்டு, இறுதியில் Create Filter என்ற பட்டனை அழுத்தவும்.
1. ஃபில்டர் ப்ரம் (Filter From) என்பதில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான மின்னஞ்சல் முகவரியை மட்டும் தட்டச்சிட்டு, நிரப்புகள்.
2. Has the word என்ற கட்டத்தில் is:inbox என தட்டச்சிட்டு இறுதியில் உள்ள create filter with this search என்பதை கிளிக் செய்யுங்கள்.
செட்டிங்ஸ் 2:
- அதற்கு அடுத்து Google Docs ல் உள் நுழையுங்கள்..
- பிறகு இதை கிளிக் செய்து யெஸ் மேக் ஏ காபி (Yes, make a copy)என கொடுக்கவும்.
- அப்பக்கத்தில் Tools ==> Script Editor செல்லுங்கள். அதில் Resources==>current Current Projects Tiggers என்பதை அழுத்துங்கள்.
- தோன்றும் பக்கத்தில் click here to add one now என்பதை அழுத்தி From Spreadsheet என்றிருப்பதை Time-Driven என்று மாற்றுங்கள்.
- அடுத்து Hour, Timer என்றிருப்பதை Minute Timer என மாற்றிவிடுங்கள்.
- இறுதியாக Save கொடுத்துவிடுங்கள். இப்பொழுது Authorzie கேட்கும். கன்டினியூ கொடுத்து access செய்யுங்கள்..
- அதற்கு அடுத்து கூகிள் காலண்டர் செல்லுங்கள். அதில் மொபைல் செட்டப் (Mobile Setup) என்பதைச் சொடுக்கி, phone number என்பதில் உங்களுடைய செல்போன் நம்பரைக் கொடுக்கவும்.
- பிறகு Send verification code என்பதை அழுத்துங்கள். அடுத்த ஒரு சில விநாடிகளில் உங்களுடைய செல்போன் நம்பருக்கு வெரிபிகேஷன் கோட் வரும். அதை வெரிபிகேஷன் கோட் கட்டத்தில் கொடுங்கள்.
அவ்வளவுதான்..
இனி நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஏதேனும் புதிய மின்னஞ்சல் அனுப்பட்டால் ஐந்து நிமிடத்தில் உங்களுக்கு SMS Alert ஆக அந்த மின்னஞ்சல் உங்கள் மொபைலுக்கு வந்து சேரும்.
மிகவும் பயனுள்ள இப்பதிவை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.. உடனடியாக அவர்களுக்கு மின்னஞ்சலை SMS மூலம் பெற உதவியாக இருக்குமே.. !!