Saturday, January 26, 2013

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய..

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.இதற்கு

1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com  இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.

3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள். 

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள். 

நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்
Read more »

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு



கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.

அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.


ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஓன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம்.

இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.

இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்.

இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஓப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.

அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து  மின்னஞ்சல்களும் காட்டும்.

இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.

மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஓப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.
Read more »

ஆன்லைன்(Online banking) வங்கிக் கணக்கா? உஷார்


ஆன்லைன்(Online banking) வங்கிக் கணக்கா? உஷார்



வங்கிகளின் செயல்பாடுகள் இப்போது மிக மிக எளிதாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்கின்றன. 24 மணி நேரமும் பணம் எடுக்க .டி.எம். மையங்கள், வீடு தேடி நம் பெயர் அச்சடித்துக் கிடைக்கும் செக் புக், போன் செய்தால் டி.டி., எனப் பல புது வசதிகள் இப்போது அடிப்படை வசதிகளாய் அமைந்து விட்டனஇவற்றுக் கெல்லாம் சிகரமாய் நமக்குக் கிடைப்பது இன்டர்நெட் வழி ஆன்லைன் பேங்கிங் வசதியாகும்.



 இதன் மூலம் நம் கணக்கினைக் கண்காணிக்கலாம்; நிதியை ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு மாற்றலாம்.பில்களைச் செலுத்தலாம். டிக்கட் எடுக்கலாம், என வசதிகள் நீண்டு கொண்டே போகின்றன. ஆனால் நம் பேங்க் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருட்டுத்தனமாகப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி நம் கணக்கிலிருந்து பணம் திருடும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன.

இவை பிரபலமான வங்கிகளின் இணைய தளம் போலவே தளங்களைத் தயார் செய்து, நம்மை ஏமாற்றி அதில் நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் என்டர் செய்திட வழி தந்து அவற்றைப் பெற்றுவிடுகின்றனர்.


பின் அவற்றைப் பயன்படுத்தி பணத்தை எளிதாகத் திருடுகின்றனர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் .சி..சி.. வங்கிக் கணக்குகளில் இந்த திருட்டு அதிகம் நடப்பதாகத் தெரிகிறது. எனவே வாடிக்கையாளர்கள் கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இவை வலியுறுத்தி வருகின்றன. அவற்றை இங்கு காணலாம்.


1.
முதலாவதாக இந்த வங்கிகளிலிருந்து உங்கள் இமெயிலுக்கு ஏதேனும் இமெயில் மெசேஜ் வந்தால் அவற்றைத் திறக்கவோ, அல்லது திறந்த பின்னர் அதில் காணப்படும் லிங்க்குகளில் கிளிக் செய்திடவோ வேண்டாம். இது போன்ற மெயில்களை இந்த பேங்குகள் அனுப்புவதில்லை.


2.
இந்த வங்கிகளின் தளங்களை அணுகிய உடனேயே அதன் முகவரியைப் பார்க்கவும். அதில் https என்ற எழுத்துக்களில் முதல் முகவரி சொல் இருக்க வேண்டும். இதில் s என்பது செக்யூரிட்டி என்பதனைச் சுருக்கமாகச் சொல்லிப், பாதுகாப்பான தளம் என்பதைக் குறிக்கிறது. இந்த s இல்லை என்றால் அது போலி. எனவே உடனே வெளியேறவும்.


3.
பூட்டு மாட்டும் பேட்லாக் சிறிய படம் ஒன்று இந்த தளத்தின் அதே முகப்புப் பக்கத்தில் எங்கேணும் இருக்கும். இது பெரும்பாலும் அட்ரஸ் பாரின் ஓரத்தில் அல்லது கீழாக ஒரு இடத்தில் இருக்கும். இதன் மீது கிளிக் செய்தால், இந்த தளம் குறித்த பாதுகாப்பு சர்டிபிகேட் கிடைக்கும். இந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அத்தாட்சி இதுவாகும்.


4.
அட்ரஸ் பாரின் முகவரிக்கு முன்னால் உள்ள பாகம் பச்சை நிறமாக இருக்கிறதா என்பதனைக் கவனிக்கவும். இதுவும் இந்த தளம் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது.


5.
மேலும் இந்த தளங்களில் லாக் இன் செய்வதற்கான கட்டங்கள் தரப்பட்டிருக்கும். ஏதேனும் பாப் அப் விண்டோ கொடுத்து, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்டால் தர வேண்டாம். தளத்தைவிட்டு வெளியேறவும்.


இவை எல்லாம் சோதனை செய்த பின்னரே லாக் இன் செய்திடவும். பல தளங்களில் இதற்கென விர்ச்சுவல் கீ போர்ட் தரப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்துவது சற்று கூடுதல் நேரம் எடுக்கும் என்றாலும், நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும்.


ஏனென்றால் ஒவ்வொரு முறை இதனைத் திறக்கும் போதும் விர்ச்சுவல் கீ போர்டில் கீகள் இடம் மாறி இருக்கும். எனவே நாம் கிளிக் செய்திடும் இடத்தை வைத்து நம் பெர்சனல் தகவல்களைப் பெற முடியாது.


சில வேளைகளில் தொலைபேசி வழியாகவும், வங்கிகளில் இருந்து பேசுவது போல பேசி நம் அக்கவுண்ட் பற்றிய பெர்சனல் தகவல்களைப் பெற முயற்சிப்பார்கள். அது போல எந்த வங்கியும் தகவல்களைப் பெறமாட்டார்கள். எனவே அவற்றைத் தவிர்த்துவிடவும்
Read more »