Saturday, December 29, 2012

இரகசிய தகவல்களை அனுப்புவது எப்படி





இரகசிய தகவல்களை அனுப்புவது எப்படி-ஓர் அறிய தகவல் 


நாம் நம்முடைய கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பவோம். நாம் யாருக்கு அனுப்பினோமோ அவரின் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டால் நம்முடைய ரகசியத் தகவல்களும் களவாடப்படும். இதனை தவிர்ப்பதற்காக தகவல்களை ரகசியமாக ஒருமுறை மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.
இது நாம் அறியப்படாத ஒரு அற்புதமான செய்தி என நம்புகிறேன்


இந்த வசதியை https://oneshar.es/  என்னும் தளம் நமக்கு தருகிறது.


முதலில் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்
பின்பு அங்கு சென்று Create One New என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அதன் பின் வேண்டிய தகவலை தட்டச்சி செய்த பிறகு Create Link ஐ கிளிக் செய்யவும்.


பிறகு உங்களுக்கென்று ஒரு URL கிடைக்கும். அதில் நீங்கள் க்ளிக் செய்துவிடாதீர்கள். யாருக்கு செய்தி அனுப்ப வேண்டுமோ? அவர்களுக்கு அந்த  URLஐ அனுப்புங்கள்.

அந்த  URL ஐ அவர்கள் க்ளிக் செய்தவுடன் அவர்களுக்கு செய்தி தெரியும். இதை ஒருமுறை மட்டுமே படிக்க முடியும். மீண்டும் அந்த  URL Click செய்தால் அந்த செய்தி இருக்காது.

Read more »

Sunday, December 9, 2012

வைரஸ்கள் உருவாக்கப்பட காரணம் என்ன ?


        வைரஸ்கள் உருவாக்கப்பட காரணம் என்ன ?



கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே.எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களை நாசம் செய்து விடுமோ? இயக்கத்தை முடக்கி விடுமோ என்ற அச்சத்துடன் ஒவ்வொருவரும் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது.அப்படிப்பட்ட இந்த வைரஸ்கள் ஏன் உருவாக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.

முதல் காரணம் என்னவென்றால் தன்னை அதிமேதாவி என்று எண்ணிகொண்ட
மென்பொருள் வடிவமைப்பாளர்கள்.மேலும் கீழ்கண்ட காரணங்களுக்காக இவை உருவாக்கப்படுகிறது

பணம்:


இதுதான் பலரை இழுக்கும் தூண்டில்.வைரஸ் உருவாக்கி பல வழிகளில் சம்பாதிக்கலாம்.முதலாவதாக டேட்டா திருட்டு.வைரஸ் மூலம் அடுத்தவர்களின் கம்ப்யுட்டரில் நுழைந்து தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் தகவல்களைத் திருடுவது.தனிப்பட்டவரின் கிரெடிட் கார்டு தகவல்களைக் கண்டறிந்து அதனைப் பயன்படுத்தி பணம் திருடுவது இன்று மேல் நாடுகளில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு குற்றம் ஆகி விட்டது.இன்னொன்று அடுத்தவரின் கம்ப்யூட்டரை முடக்கி அதனை பணயக் கைதியாக்கிப் பணம் பறிப்பது.முதலாவதாக நேரடியாகவே கம்ப்யூட்டரின் உரிமையாளரை தான் தான் இப்படிச் செய்ததாகக் கூறி மீண்டும் இயக்க பணம் கேட்பது.இன்னொரு வழியில் தான் அதற்கு தீர்வு காணும் மூன்றாவது மனிதனைப் போல் சென்று பணம் பெறுவது.இவற்றை ஆங்கிலத்தில்"ransomware" என்று அழைக்கின்றனர்.ransom என்ற சொல் பணயக் கைதியை விடுவிக்க வழங்கப்படும் பணம்.



தனி மனிதப் பிரச்னைகள்:



தாங்கள் மற்றவர்களை காட்டிலும் இருந்த கம்ப்யூட்டர் உலகில் வலிமை படைத்தவராக இருக்கிறோம் என்ற உணர்வைப் பெற பலர் வைரஸ்களை உருவாக்குகின்றனர்.இந்த உணர்வை மற்றவர்களிடம் காட்டாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே இருந்த எண்ணத்தை ஊட்டிக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு எந்த பலனும் பயனும் இதில் கிடைக்கவில்லை என்றாலும் தன திறமையைக் கொண்டு சிறிய அளவிலாவது அழிவை உருவாக்கி விட்டேன் என்ற தீய சிந்தனை இவர்களுக்கு ஏற்படுகிறது.வைரஸ் குறித்து பத்திரிக்கைகள் மற்றும் இணையதள மீடியாக்கள் எழுதுகையில் ஏதோ ஒரு சாதனை புரிந்தது போல் எண்ணிக் கொள்கிறார்கள்.அதனால் தான் ஒருவர் தான் உருவாக்கிய வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்ற செய்தியைப் பெற்ற பின் அதைக் காட்டிலும் அதிக சேதத்தை விளைவிக்கும் வைரஸை எழுத முயற்சிக்கிறார்.


குழு ஆதிக்கம்:


ரௌடிக் கும்பல்கள் போல வைரஸ் உருவாக்கும் குழுக்கள் ஆன்லைனில் இயங்குகின்றன.இவர்கள் வைரஸ் உருவாக்கி பணம் சம்பாதிப்பதில்லை.ஆனால் குழுவாகச் சேர்ந்து கொண்டு தங்களால் வைரஸ்களை உருவாக்கி அழிவைத் தர முடியும் என ஆன்லைனில் வெப்சைட்டுகளில் ஆரவாரமிடுவது இவர்கள் பொழுதுபோக்கு.இதே போல் பல கும்பல்களை இண்டர்நெட்டில் காணலாம்.இதில் ஒரு மோசமான விஷயம் என்னவென்றால் இருந்த குழுக்கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதுதான்.


அரசியல் மற்றும் சமூகப் பழி தீர்த்தல்:


அண்மையில் கட்சி ஒன்றின் இணைய தலத்தில் ஹேக்கர்கள் புகுந்து அங்கு தரப்பட்டிருந்த தகவல்களை எல்லாம் மாற்றி வைத்து விட்டதாக செய்திகள் வந்தன.இதுவும் ஒரு குழு ஏகாதிபத்திய மனப்பான்மை தான்.ஒரு அரசியல் கட்சி அல்லது சமூகக் குழுவினருக்கு தொல்லை தருவது அல்லது அதனைத் தாக்கும் ஒரு வழியாக வைரஸை உருவாக்குவது இப்படிப்பட்டவர்களின் வேளையாக உள்ளது.இவர்கள் வைரஸ்களை உருவாக்கி அழிக்கும் வழியே அலாதியாக இருக்கும்.எடுத்துக் காட்டாக ஔ அரசியல் கட்சியின் இணைய தளத்தைக் கெடுக்க ஒரு வைரஸ் எழுதப்பட்டது.ஆனால் அது நேராக அண்டக் கட்சியின் தளத்தை ஆக்கிரமிக்கும் வகையில் எழுதப்படவில்லை.அதற்குப் பதிலாக உலகின் பல்வேறு இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த வைரஸ் புரோகிராமினைப் பதிப்பது முதல் வேலையாக உள்ளது.அந்த வைரஸ் குறிப்பிட்ட நாளில் அக்கட்சியின் இணைய தளத்தைத் தான் தங்கும் கம்ப்யூட்டரில் இருந்து தாக்குவது போல அமைக்கப்பட்டிருக்கும்.அது அடுத்த நிலையாக இருக்கும்.பாதிக்கப்படுபவர் இந்த வைரஸ் எங்கிருந்து உருவானது என்று அறிய முடியாது.ஏனென்றால் வைரஸ்கள் சம்பந்தமில்லாத கம்ப்யூட்டர்களிலிருந்து அந்த கம்ப்யுட்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கே தெரியாமல் அந்த அரசியல் கட்சியின் இன்டர்நெட் வெப்சைட்டை தாக்கியிருக்கும்.இன்னும் பலவகை வைரஸ் தாக்குதல்கள் நாள்தொறும் உருவாகி வருகின்றன.சைபர் உலகின் சாபக் கீடாக இது மாறி விட்டது.வேறு வழியின்றி இத்தகைய மோசமானவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே நாம் நம் உழைப்பையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டியுள்ளது.
Read more »

Wednesday, November 14, 2012

facebook பற்றிய சுவாரிசயமான தகவல்கள்

       facebook பற்றிய சுவாரிசயமான தகவல்கள்


உலகில் 500 மில்லியன் உறுப்பினர்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய சமுதாய வலைதளத்தைப் பற்றி இங்கு பார்ப்போம் 

உலகமெங்கும் பரந்து விரிந்து உலகத்தினை ஒரு வீடாக சுருக்கி வைத் திருக்கும் இணையத்தில் காணப்படக்கூடிய குறிப்பிட்டு சொல்லகூடிய முத்துக்களில் ஒன்றான facebook நம்மவர்களில் பாஷையில் மூஞ்சி புத்தகம்,முகப்புத்தகம் என அழைக்கப்படும் இது மிக முக்கிய பங்காற்றி வருக்கிறது என்றால் அது மிகையல்ல...................

Facebook இனது வரலாற்றை அறிவது சுவாரசியமானது.எனவே அதன் முக்கிய வளர்ச்சி பாதையின் முக்கிய படிக்கற்களைபார்க்கலாம்.
February 2004
  •  Mark Zukerberg 
  • Dustin Moskovitz 
  • Chris Hughes 
  • Eduardo Saverin

Facebook இன் நிறுவனர்களான Mark Zukerberg ,Dustin Moskovitz ,Chris Hughes ,Eduardo Saverin  கியோர் இணைந்து அவர்களின் ஹார்வர்ட் கல்லூரியில் facebook இனை நிறுவுகின்றனர்.



March 2004
Satandford ,Columbia ,Yale போன்ற கல்லூரி மாணவர்களும் இணைகின்றனர்



September 2004
1. "Groups Application " facebook இல் சேர்க்கப்படுகிறது.
2. Facebook உறுப்பினரின் profile இக்கு wall எனும் feature சேர்க்கப்படுகிறது.




December 2004
Facebook 1 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.




May 2005
800 இக்கும் மேற்பட்ட கல்லூரிகளை உள்ளடக்கும் வலையமைப்பாகிறது.




August 2005
 Thefacebook .com என்ற கம்பனியின் பெயர் Facebook என மாறுகிறது



September 2005
Facebook வலையமைப்பில் HighSchool மாணவர்களும் இணைகின்றனர்



October 2005
1. Facebook வலையமைப்பில் InternationalSchool மாணவர்களும் இணைகின்றனர்.
2. Facebook இல் application ஆக Photos feature சேர்க்கப்படுகிறது.




December 2005
Facebook 5 .5 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.




April 2006
Mobile Feature இனை facebook ஆரம்பிக்கிறது.




May 2006
Facebook இல் வேலை செய்பவர்கள் வலையமைப்பு சேர்க்கப்படுகிறது .




Auguest 2006
1. Facebook Development Platform உருவாகிறது
2. Notes எனும் appilication சேர்க்கப்படுகிறது




September 2006
1. News Feed ,Mini -Feed அறிமுகமாகிறது.
2. யாரும் இணையலாம் என facebook இன் கதவுகள் திறக்கின்றன.




November 2006
Facebook இல் Share எனும் Feature சேர்க்கப்படுகிறது




December 2006
Facebook 12 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.




Febrauary 2007
Facebook இல் VirtualGiftShop எனும் Feature சேர்க்கப்படுகிறது




March 2007
1. 2 மில்லியன் கனடா உறுப்பினர்களை தன்னகத்தே கொள்கிறது
2. 1 மில்லியன் UK உறுப்பினர்களை தன்னகத்தே கொள்கிறது




April 2007
1. Facebook 20 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.
2. தனது தளத்தின் வடிவமைப்பை மாற்றுகிறது




October 2007
1. Facebook 50 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.
2. Mobile இக்கான Facebook Platform அறிமுகமாகின்றது





November 2007
"Facebook Ads " இனை facebook ஆரம்பிக்கின்றது




January 2008
ABC இன் ஜனாதிபதி தேர்தல் விவாதங்களின் Co -Sponsors




February 2008
Spanish ,French மொழிகளில் facebook கிடைக்கிறது




March 2008
ஜெர்மன் மொழியில் facebook கிடைக்கிறது




April 2008
1. "Facebook Chat " இனை அறிமுகப்படுத்துகின்றது 
2. 21 மொழிகளுக்கான Translation Application அறிமுகமாகிறது




August 2008
100 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.



December 2008
"Facebook Conncet " அறிமுகமாகிறது




January 2009
1. 150 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது
2. CNNLive /Facebook ஒன்றிணைவு




February 2009
1. 175 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது
2. OpenID board இல் இணைகிறது
3. "Like " Feature இணைக்கப்படுகிறது




April 2009
200 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது




June 2009
Facebook Username இனை அறிமுகப்படுத்துகின்றது




July 2009
250 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது




Agust 2009
FriendFeed இனை facebook acquire பண்ணுகின்றது




September 2009
300 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது




December 2009
350 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது



February 2010
400 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது




July 2010
500 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது

குறுகிய காலதில் அதிக மக்களால் பயன்படுத்தபடும் சமூகவளைதளம் என்று கூறினாலும் மிகையாகாது ...............................



Read more »

Tuesday, November 13, 2012

கூகுள் வரலாறு ஓர் ஆய்வு

                                          கூகுள் வரலாறு ஓர் ஆய்வு



Google ஒரு பிரபல்யமான தேடு பொறியாகும் இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப் படுகின்றது.
Google 1996ம் வருடம் ஜனவரி மாதம் ,லாரி பேஜ்(Larry Page)உம் இவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியா விலுள்ள ஸ்ரான்பெஃர்ட்(stanford) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராச்சிக்கான தலைப்பு (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு)இன் முடிவில் தோன்றியதாகும்.
ஆரம்பத்தில் லாரி பேஜ் இன் ஆராச்சிக்கான விடையமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர்.
இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடையம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர்.

இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணனியின் திரையில்) கொடுப்பதை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள்.



இவர்கள் தமது ஆராச்சிக்கு புனைபெயராக பாக்ரப்’ (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின் புல இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர்.
இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி "ராங்டெக்ஸ்" (rankdex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர்.

இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட்(stanford) பல்கலைக்கழக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு Google தோன்றவும் அடிகோலினர்.

ஆரம்பத்தில் ஸ்ரான்பேஃர்ட் பல்கலைகழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்க்காக google.stanford.edu என்ற பெயர் பாவிகப்பட்ட போதிலும் பின்னர் google.com என 1997 ம் வருடம் செப்ரம்பர்15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 ம் வருடம் செப்ரம்பர் 15ம் நாள் Google தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.

1998ம் ஆண்டு செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் car grageல் Google வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர். மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக googol.com என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்

(googol என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப் பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை.).

எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "Google" என்ற புதிய சொல். car grageல் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999 ம் மார்ச் மாதம் சிலிக்கன்-பள்ளத்தாக்கு(Silicon Valley) இற்கு மாற்றலாகின.

அங்கு வெவ்வேறு இரு இடங்களில் Google இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்ரு.

அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி googleplex எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை Google கொள்முதல் செய்தும் கொண்டது.
Google
தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து Google சேர்க்கத்

தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும்,இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன.

தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும்(click) விகிதத்திலும் விற்க்கப் படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். (goto.com என்ற இதன் பெயர் overtrue services வாகவும் பின்நாளில் Yahoo! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்ரிங்" ஆயிற்று.).

கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக
வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்"(googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்"(Google) என்பது மிக பிரபல்யம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்பேஃர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது.என அர்த்தப் படுத்தியும் உள்ளது.

கூகிள் தேடுபொறி(google search) தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி (PageRank mechanism) காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.
Google
பங்குச் சந்தை வருகை
கூகிள் தேடுபொறி 1998 செப்ரம்பர் 7இல் அமெரிக்காவின் கலிபோஃர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது.

இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் விஷேட பங்குவகிக்கும் Google, 2004ம் ஆகஸ்ட்டு மாதம் 19ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்துகொண்டது. இந்த நிறுவனத்தில் 15,916ம் முழுநேர வேலையாட்கள் (2007ம் செப்ரெம்பர் 30ம் கணக்கெடுப்பின் படி)பணியாற்றுவதுடன் இதுவே "நாஸ்டாக்"(NASDAQ) இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியதுமாகும்.
லாரி பேர்ஃஜ் ,சேர்ஜி பிரின் இனால் சேர்ந்து உருவாக்கப்பட்ட கூகிள் நாஸ்டாக் பங்குச்சந்தையில் வந்த 2004ம் ஆக்ஸ்ட்டு 19ம் அன்று $1.67 பிலியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியன் மேலாக Google நிறுவனம் மதிப்பாகியிருந்தது.

படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள், ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்தி விஸ்த்தரிப்பு, இணைய மின்-அஞ்சல், இணையவழி வரைபடம், அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணையவழி வீடியோவையும் இணைத்து கொண்டதன் மூலமாக பன்மடங்கு (4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது.

அத்துடன் 2005ம் யூன் மாதம் $52 பில்லியன் சந்தைப் பெறுமதியுடன் $7 பில்லியன் பணத்தினையும் கூகிள் தம் வசம் வைதிருந்தது. இத்தனைக்கும் "பிசாசு மாதிரி இருக்காதீர்!" ("don’t be evil" இதையே தனது வியாபார அடை மொழியாக கூகிள் பதிவு செய்திருந்தது.), என மற்றயவர்களை ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த கூகிள் தற்போது தனது நிலைப் பாட்டினை நியாயப்படுத்தி வருகிறது. மேலும், கூகிள் தனது தேடுபொறியின் இலச்சனையில் பலவித கண்கவர் யுக்திகளை விஷேச தினங்களில் "Google Doodles" வெளியிட்டும் வருவதும் யாருமறிந்ததே.
மூலதனமும் பங்குச் சந்தையும்
முதலாவது முதலீடாக ஒரு இலட்சம் டொலர்களை "சண்மைக்கிரோ"(SunMicrosystem)இன் ஸ்தாபகர்களில் ஒருவர் மூலம் மட்டுமே பெற்றனர் என்பதுடன், அப்போது Google நிறுவனம் தோன்றி இருக்கவுமில்லை. இந்த முதலீட்டின் பின் 6 மாதங்கள் சென்ற நேரத்தில் பல முதலீட்டாளர்கள் முதலிட முன் வந்தும் இருந்தனர். அத்துடன், 2003ம் ஒக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகிளை எடுத்துச்செல்ல ஆலோசிக்கும் வேளை "மைக்கிரோ சொப்ற்"(MicroSoft) புகுந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கைகூடமற் போயிற்று.

ஜனவரி 2004இல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான "மோர்கன் ஸ்ரான்லி"(Morgan stanley) ,"கோல்மான் சாச்ஸ்" (Goldman Sachs) இனால் பங்குச் சந்தையில் சேர்வதற்கான ஏற்பாடு தொடங்கபட்டது. பங்குச் சந்தையில் முதல்நாள் சேரும் வேளை $4 பில்லியன்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர்.

இதனிடையே கூகிளானது 2004ம் மேமாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்மானை வெட்டி விட்டு வேறொரு பிரபல்யமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004ம் ஆகஸ்ட்டு 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்தபோது ஒவ்வொரு பங்கும் $85க்கு விற்க்கப்பட்டது.


முதல் நாள் மொத்தமாக கைமறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது உத்தேசிக்கப்பட்ட அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும், அன்று கூகிளின் இரட்டையர்கள் தம்வசம் 271 மிலியன் பங்குகளை வைதிருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர்

Read more »

Monday, November 12, 2012

An Eye opener

*Duniya is for Test, Aakhirat is for rest, Life is only best when Quran is in our chests* 

 They are not  aware about the advanced world.  
Sitting on the grass mat, living an  isolated 
life….


All day he has to pick  garbage for his 
survival…..




Care  for child  safetyduring  play!!!



No home to protect them  from the winter….



          All that belongs to me is  my body.  
             Can’t afford a pair of  shoes…. 
                 


Nido milk is good for  children’s health, but….



Study, play and work all in  one…..



How do you see his  future….. 


Living on the garbage  pile….  



Do you see hope in these  eyes!!!!  



Looking for  food…



Not happy with your 2  Bedroom Apartment???  
This is my home, my world, my  universe….  







                              Where is my  lunch??

Don’t  waste water, some people desperately need  it… 
         


So what do you  think about yourself ? 
We could have been in one of these pictures  isn't it. Of course we don't even wish to view so. 

It is the pure mercy  of God we are in a status of reading this message.

We do mostly keep thinking of  what we don't have or what we need to have. 


Try to reach to those  who deserve to share your  blessings.
 
"Allahumma Maghfirli Ma Qaddamtu, Wa Ma Akkhartu, Wa Ma Asraftu, Wa Ma Aalantu, Wa Ma Asrartu, Wa Ma Anta A'alamu Bihi minni, Antal Mugaddimu, Wa Al-Mu'akkhiru LA ILAHA ILLA ANTA, SUBHAANAK"


Read more »