ஜூன் 24- உலகின் அதி வேக சூப்பர் கணினியை சீனா உருவாக்கி உள்ளது.
மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த சூப்பர் கணினியை உருவாக்கியுள்ளனர்.
அதாவது நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தது.
மேலும் இந்த கணினியை கொண்டு மிக கடினமாக கணக்குகளை கூட துல்லியமாக செய்து முடிக்கலாம்.
இதுவரையிலும் அமெரிக்க எரிசக்தி அமைச்சகத்தின் தயாரிப்பான டைட்டன் என்ற கணினிதான் உலகின் அதிவேக சூப்பர் கணினியாக கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment