Monday, May 20, 2013

Pendrive ஐ RAM ஆக மாற்ற.........


நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.




  • பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும். 
  • My Computer மீது Right Click செய்யவும். 
  • இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும். 
  • இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும். 
  • இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும். 
  • இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும். 
  • இப்போது Change என்பதை தெரிவு செய்யவும். 


  • இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும். 
  • இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும். 
  • இப்போது இதனை save செய்யவும். 
  • கம்ப்யூட்டரை Restart செய்யவும்.
Read more »

Wednesday, May 15, 2013

உலகத்தில் மொத்தம் எத்தனை இணையதளங்கள் உள்ளன ( Infographic )

உலகத்தில்  மொத்தம் எத்தனை இணையதளங்கள் உள்ளன என்று ஒரு நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது . அந்த கணக்கெடுப்பில் என்ன ஆச்சரியம் என்றால் இணையம் (www) தொடங்கி கடந்த 15 வருடங்களை விட 2011 -ம் ஆண்டு மட்டும் 15 வருடங்கள் உருவாக்கிய இணையதளங்கள் இந்த ஒரே வருடத்தில் உருவாக்கப் பட்டுள்ளன . Netcraft, நடத்திய கணக்கெடுப்பின் படி 525,998,433 தளங்கள் இணையத்தில் உள்ளன . இந்த கணக்கெடுப்பு NOV 2011 வரை உள்ள நிலவரங்களின் படி எடுக்கப்பட்டுள்ளது

சிகப்பு நிறத்தில் உள்ளது தினமும் புதுப்பிக்கப்படும் தளங்கள் .
உதா நிறத்தில் உள்ளது மொத்த தளங்கள் .




மூக்கால் பகுதி தளங்கள் sub-domain வுடன் இயங்கும் 

கூகுளின்  ப்ளாக்ஸ்போட் -ட்டும் வோர்ட்பிரஸ் தளங்களும் ஆக்கிரமித்து உள்ளன  . 

அதிகமான  நேரங்கள் பயன்ப்படுத்தபட்ட சமூகவலை தளங்கள் :
53,457, 259 நிமிடங்கள் பேஸ் புக்கில் பயன்படுத்தப்பட்டது . 

723,7923 நிமிடங்கள் பிளாக்கரில் பயன்படுத்தப்பட்டது . 


623,525 நிமிடங்கள் tumblr தம்புளரில் பயன்ப் படுத்தபட்டது . 

565,156 நிமிடங்கள் டுவிட்டரில் பயன்படுத்தப்பட்டது .


325,679 நிமிடங்கள் லிங்க்டு தளம் பயன்படுத்தப்பட்டது .
  Thanks ROI Media.

முழு  படத்தை  பார்ப்தற்கு இங்கு கிளிக்  செய்து பெரிதாக பார்க்கவும் 



Read more »

Monday, May 13, 2013

Windows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம்

கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் அட்மின் கடவு சொல்லை மறந்து போவது, அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.





இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தும் இழந்துவிடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது.


விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.



விண்டோஸ் 7 Bootable DVD மூலமாக குறிப்பிட்ட கணினியை துவக்குங்கள். Install திரையில் Repair your Computer லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் Options திரையில், Command Prompt ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில், கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

copy c:\windows\system32\sethc.exe c:\

இப்பொழுது Sticky Keys கோப்பானது C:\ இல் காப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe கோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe

Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும்பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.



இப்பொழுது கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள். Login திரை தோன்றும் பொழுது, Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)



Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள். (பயனர் பெயர் (azarudeen) மற்றும் கடவு சொல்லை (newpassword) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)

new user azarudeen newpassword




அவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7 DVD யில் பூட் செய்து Command Prompt சென்று, கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.

c:\sethc.exe c:\windows\system32\sethc.exe.

Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள்.
Read more »

Saturday, May 11, 2013

PenDriveல் write protected பிழையை நீக்குவது எப்படி?

இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே. 
மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.

இத்தகையப் பயன்மிக்க பென்டிரைவ்(pendrive) அல்லது மெமரிகார்ட்(memory card) போன்ற ரீமூவபிள் டிவைஸ்களை நாம் பயன்படுத்தும்பொழுது சில சமயம் cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk என்பன போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும்.

உடனே என்னவோ ஏதோவென்று, பதறாதீர்கள். இவ்வாறான பிழைச் செய்திகளை(Error) வருவதற்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களே(Virus Program) காரணமாக இருக்கும்.

இதுபோன்ற பிழைச்செய்திகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry கோப்பில் வைரஸ்கள் 'கை' வைப்பதுதான். அதனாலேயே பெரும்பாலான பிழைச்செய்திகள் இவ்வாறு தோன்றும்.

சரி.. write protected பிழைச் செய்தி காட்டினால் என்ன செய்வது? அதற்கான தீர்வுதான் என்ன? என்கிறீர்களா?

இதோ தீர்வு..

உங்களுடைய கணினியில் Start பட்டன் அழுத்துங்கள்.
Run விண்டோவை திறவுங்கள்.
அதில்

reg add "HKLM\System\CurrentcontrolSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /vWriteProtect /f/d 0

என கொடுத்து ok பட்டனை அழுத்துங்கள்.

அவ்வளவுதான். இப்பொழுது உங்களுடைய கணினியில் உள்ள பென் டிரைவை எடுத்துவிட்டு மீண்டும் கணினியில் இணைத்து புணிபுரியத் தொடங்கலாம். இப்பொழுது Write Protected பிழைச்செய்தி தோன்றாது.

Read more »

Friday, May 10, 2013

Operating System Live CD என்றால் என்ன ...?

சாதாரணமாக நீங்கள் உங்கள் கணினியை தொடங்கியவுடன், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்கில் பதியப்பட்ட ஆபரேட்டிங் என்ன செய்யும்? 



கணிப்பொறி இயக்கப்பட்டவுடன் முதன் முதலில் Operating System என்ற சொல்லக்கூடிய இயங்குதள புரோகிராம்களை Hard Disc அடுக்குகளில் ஏற்றும். அதன் பிறகே அதில் குறிப்பிட்ட செயல்முறையில் சில கோப்புகளை இயக்க தொடங்கும். இக்கோப்புகள் கணினியில் உள்ள Hardware களை சரிபார்க்கும். Driver Files களை Memory-க்கு ஏற்றிக்கொள்ளும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களுக்கு ஏற்ற, அதற்கு தேவையான Library Files (கோப்புகளை) தயார்படுத்தி வைக்கும். இதுதான் கணினி உயிர்ப்பு பெற்றவுடன் செய்யும் வேலைகள்.
சரி.. Hard Disk -ல் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும் வேலைகளை, ஹார்ட் டிஸ்க்கில் பதியபட்டாமல், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் CD யில் பதியப்பட்டு, கணினியை இயக்கினால் என்ன?

இந்த சிந்தனையில் விளைவாக உருவானவே லைவ் சி.டி.
லைவ் சி.டி. என்றால் என்ன? இந்த லைவ் சி.டி என்ன செய்யும்? 

ஹார்ட் டிஸ்க்கில் நாம் பதித்து இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும், இந்த சிடி உள்ளடக்கியிருப்பதால், ஆபரேட்டிங் சிஸ்டம் (operating system) செய்யும் அதே வேலையை இந்த லைவ் சி.டி. யும் செய்யும்.
அதாவது, பொதுவாக கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில்(Hard Disk) ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் (OS files) பதியப்பட்டிருக்கும். அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குகான கோப்புகள் இங்கு குறுவட்டு என்று சொல்லக்கூடிய சி.டியில் உள்ளது அவ்வளவே.
இதில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் மிக நுணுக்கமாக, செறிவுடன் கூடிய கம்ப்ரஸ் செய்யப்பட்டுள்ளது. சிடியை கணினியில் செலுத்தி இயக்கம் பெறும்பொழுது இதிலுள்ள கோப்புகள் கணினியில் உள்ள Ram Memory -ல் uncompress ஆகும். அதன் பிறகு அந்த RAM யை ஒரு Disk Driver ஆக கணினி டிரைவர் கோப்புகளுக்கு அறித்துவிடும். அதன் பிறகு எப்பொழுதும் போல புரோக்கிராம் கோப்புகளை அங்கிருந்து செயல்படுத்த தொடங்கும். 

அதாவது சிடியில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகளை அன்கம்ப்ரஸ் ரேமை (RAM) உபயோகித்துக்கொள்ளும். பிறகு அந்த ரேமையே டிஸ்க் டிரைவாக (Disk Drive) பாவித்து கணினியிலுள்ள அனைத்து டிரைவர் கோப்புகளுக்கும் 'இது தான் டிஸ்க் டிரைவ்' என்பதை உணர வைத்துவிட்டு, வழக்கம்போல ஆபரேட்டிங் சிஸ்டத்திலுள்ள புரோகிராம் கோப்புகளை செயல்படுத்த தொடங்கும்.
பெரும்பாலான Booting disk கள் அனைத்தும் இதே செயல்பாட்டை தொடர்ந்து செய்துகொண்டுள்ளன. OS இன்ஸ்டால் செய்யும்பொழுது இதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

இவற்றையே பணம் கொடுத்து உபயோகிக்காமல் இலவசமாக உபயோகிக்க என்ன வழி என்று சிந்தித்ததின் விளைவே ஓப்பன் சோர்ஸ்(Open Source) என்று சொல்லக்கூடிய திற மூல அங்கத்தின் உறுப்பினர்கள் இந்த செயல்முறைகளை ஆராய்ந்து மேம்படுத்தி, பல்வேறு இயக்க முறைமைகளைக் கொண்டு லைவ் சிடிக்களை கண்டுபிடித்து இலவசமாக வெளியிட்டுள்ளனர்.
இன்று லினக்ஸ்சின் உபுண்டு(Ubuntu), குபுண்டு(gubuntu) ஆகிய லைவ் சிடிக்கள் கிடைப்பதோடு, விண்டோஸ் லைவ் சிடிக்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. 

இலவச லைவ் சி.டி.க்களை பெற்றுக்கொள்ள கீழ்க்கண்ட இணைப்புகள் உங்களுக்கு உதவும்.
1. shipit.ubuntu.com
2. www.frozentech.com/content/livecd.php
மேலும் google Search-ல் free live operating system cd என்று தேடினால் உங்களுக்கு நிறைய இலவச ஆப்பரேட்டிங் லைவ் சிடிக்களுக்கான தங்கள் கிடைக்கும்.
Read more »

Tuesday, May 7, 2013

கணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை கண்டறிவதற்கு...


நாம் கணணியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ், போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணணியில் கட்டாயம் நிறுவி இருப்போம்.
அதை நிறுவும் பொழுது அதற்கான சீரியல் எண்களை கொடுத்து நிறுவி இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது.
ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணணியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த சீரியல் எண் மிகவும் அவசியம். இது போன்ற சூழ்நிலையில் நமக்கு உதவத்தான் இந்த சூப்பரான மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். இதை நிறுவ வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம். அந்த மென்பொருளை Extract செய்து பின்னர் அதன் .exe கோப்பை ஓபன் செய்யுங்கள். ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அதில் Search என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Time counter ஓடி கொண்டிருக்கும். முடிந்ததும் ok என்ற பட்டன் வரும் அதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவு தான் உங்களுடைய கணணி ஸ்கேன் ஆகும். ஸ்கேன் ஆகி முடிந்ததும் உங்கள் கணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் தெரியும். இப்படி உங்களுக்கு கணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் வரும்.
உங்கள் கணணி மட்டுமல்லாது அலுவலகங்களில் உங்கள் கணணியோடு லோக்கல் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணணியின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம்.
அதற்கு local host என்ற இடத்தில க்ளிக் செய்தால் உங்கள் கணணியோடு இணைந்துள்ள மற்ற கணணியின் சீரியல் எண்களையும் அவர்களின் அனுமதியின்றி பார்த்து கொள்ளலாம்.
HKEY_LOCAL_MACHINE என்ற இடத்தில் மாற்றம் செய்தும் மற்ற கணணிகளின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம். உங்களுடைய நண்பர்களின் கணணிகளில் நிறுவியும் அந்த சீரியல் எண்களை குறித்து வைத்தும் நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த அனைத்து வசதிகளையும் இலவசமாக நமக்கு வழங்குகிறது இந்த மென்பொருள்
Read more »

Sunday, May 5, 2013

ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி

இணைய உலகில் அசைக்க முடியாத அரசனாகத் திகழும் கூகுள் நிறுவனமானது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு புத்தம் புதிய வசதிகளை வழங்கி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது Google Drawing எனும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது Document, Presentation, Website போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய காவிகளை (Vector) அடிப்படையாகக் கொண்ட உருவங்கள், Chart மற்றும் Diagrams போன்றவற்றினை வரைவதற்காக வசதியை தரும் அப்பிளிக்கேஷன் நீட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Google Drive உடன் இணைக்கபப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் ஆனது வரையப்படும் உருவங்களை இயல்பாகவே சேமித்து வைக்கக்கூடியதாகக் காணப்படுவதுடன் மீண்டும் அவற்றினை எந்தவொரு கணனி சாதனத்திலிருந்தும் பயன்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ளது.

மேலும் குரோம் உலாவிகளில் நிறுவி பயன்படுத்தக்கூடியவாறு உருவாகக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் பல் பயனர்(Multiple User) இடைமுகத்தினை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

டவுன்லோட் செய்ய
Read more »

Saturday, April 20, 2013

Software களை Install செய்யும் default Path ஐ நிரந்தரமாக மாற்ற ..

பொதுவாக நமது கணணியின் Windows ஆனது C drive இல் install பண்ணப்பட்டிருக்கும். நாம் வேறு மென்பொருட்களை install பண்ணும் போது அது default ஆக C:\Program Files யையே தெரிவு செய்யும். இதனால் C drive இல் Free Space குறையும் இதனால் கணணியின் வேகம் குறைவடையும் . அடிக்கடி Low disk Space எனும் Message தோன்றும். இதில் இருந்து விடுபட நம்மில் சிலர் install பண்ணும் போது C தவிர்ந்த வேறு drive இல் install பண்ணுவார்கள் இதற்காக ஒவ்வொரு முறை install பண்ணும் போதும் மற்றைய drive ஐ தெரிவுசெய்து install பண்ணுவார்கள்
இந்த தொல்லையில் இருந்து விடுபட registry இக்குள் சென்று ஒருதரம் சிறிய மாற்றம் செய்தால் போதும் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் program install பண்ணும் போதும் அது நாங்கள் மாற்றிய drive யையே default ஆக எடுக்கும்.
இதற்கு முதலில் Start சென்று regedit என type செய்து enter பண்ணவும்.

பிறகு பின்வரும் ஒழுங்கு முறையில் செல்லவும்
HKEY_LOCAL_MACHINE----> SOFTWARE---> Microsoft---> Windows---> CurrentVersion

CurrentVersion என்ற Folder க்குள் இருக்கும் Value களில் ProgramFilesDir என்ற value இருக்கும் இது C:\Program Files என set செய்யப்படிருக்கும் அதில் Mouse வைத்து right click செய்து modify என்பதை click செய்து Value data என்பதில் உங்களுக்கு விருப்பமான drive இல் உள்ள Folder இன் path ஐ Select பண்ணிய
பின் OK செய்து வெளியேறவும்

Read more »

Google இன் Magic உங்களுக்கு தெரியுமா...??

தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன. 
இந்த வார்த்தைகளை கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும்.

Let it Snow 
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உருவாக்கியுள்ளது.

Tilt 
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.

Do a Barrel Roll 
இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.

Hanukkah 
இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சத்திரத்தினால் ஆன ஒரு வரி காணப்படும்
Read more »

Tuesday, April 2, 2013

Android என்றால் என்ன?


தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.
ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள்.

ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions):

ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள்.

இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்:


சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும்.

ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:


1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படிWidget-களை வைத்துக் கொள்ளலாம்.

2. Threaded SMS - நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும்.

3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும்.

4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும்.  உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை. :) :) :)

5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்).

மேலும்  பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்கவிக்கிபீடியாவில் பார்க்கவும்.

ஆன்ட்ராய்ட் பயன்பாடு:

ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.

Android Market:

ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. இறைவன் நாடினால் இதைப்பற்றி தனிப பதிவில் பார்ப்போம்.

Read more »

Sunday, March 31, 2013

விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு...


விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம்.இந்த செயல்முறையை நான்கு இலகுவான படிமுறைகளை கொண்டு multiboot USB டிரைவ் மூலம் செயல்படுத்தலாம்.

இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களது USB கட்டாயம் 4 GB அல்லது 8 GB யாக இருக்க வேண்டும். அத்துடன் FAT32 கோப்பு கணணியுடன் போர்மட் பண்ணி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அனைத்தையும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் WinSetupFromUSB என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்த பின்னர் அந்த மென்பொருளை உங்களது கணணியில் திறந்து கொள்ள வேண்டும்.
1. முதலில் நீங்கள் போர்மட் செய்த USB டிரைவை கணணியில் புகுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் தரவிறக்கம் செய்த WinSetupFromUSB_1-0-beta7.exe கோப்பை செயலாக்கம்(Run) செய்யுங்கள்.
2. அந்த மென்பொருள் உங்களது USB யை கண்டுபிடிக்கின்றதா(detect ) என உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. அடுத்து Windows 2000/XP/2003 Setup என்ற படிமத்தில் Windows XP installation கோப்பின் இடத்தை தெரிவு செய்வதுடன், அருகில் உள்ள சரிபார்க்கும் பெட்டியையும்(check box) தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து Vista/7/Server 2008 Setup/PE/RecoveryISO என்ற படிமத்தில் Windows 7 installation கோப்பு உள்ள இடத்தை தெரிவு செய்தவுடன், இந்த இரண்டு சந்தர்ப்பத்திலும், உங்களிடம் Operating சிஸ்டம், ISO images யாக இருக்கும் என்றால் அதை WinRar or 7-Zip கொண்டு Extract செய்ய வேண்டும்.
4. இறுதியாக GO என்ற பொத்தானை அழுத்தினால் போதும் அது தன் வேலையை தொடங்கி விடும்.

download செய்ய
Read more »

Saturday, March 30, 2013

Computer இன் அனைத்து Settings உம் ஒரே இடத்தில்...!!


நமது கணினியில் எந்தெந்த செட்டிங்க்ஸ் எங்கு இருக்கிறது என்று தேடுவது சற்று சிரமமான காரியம் தான்.எடுத்துகாட்டாக ப்ரௌசெர் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும்,பாஸ்வோர்ட் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும் ஆடியோ தொடர்பான செட்டிங் ஒரு இடத்திலும் இருக்கும்.இப்படி இல்லாமல் நமது கணினியில் இருக்கும் அனைத்து செட்டிங்க்சும்  ஒரு Complete packageஜாக ஒரே இடத்தில் ஒரு போல்டேருக்குள்(Folder) இருந்தால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் தானே??

நமது வாசகர்களுக்காக சின்னதாக ஒரு "Utility program" எழுதி அதனை சாத்தியப்படுத்தியுள்ளோம் .  அதுவும் மிக எளிதாக இதனை உங்கள் கணினியில் நிறுவ முடியும்.



உங்கள் டெஸ்க்டாப்பில் போல்டெர்(Folder) ஒன்று தயாரித்து கொள்ளுங்கள்.

                                        Desktop --Right click ----New----Folder


பிறகு அந்த போல்டெரை ரைட் கிளிக் செய்து Rename செய்து கீழே தரப்பட்டுள்ள பெயரை அதற்கு தந்து விடுங்கள்.


                 God Mode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}



           கீழே உள்ள உள்ள படம் போல உங்களது டெஸ்க்டாப்பில் வந்து விடும் 
உள்ளே உங்களுக்கு தேவையான அனைத்து செட்டிங் சும் ஒரே இடத்தில நீங்கள் பார்க்கலாம்
Windows 7, Windows 8 32bit and 64bitயில்  இது வேலை செய்கிறது .windows vista 64bit யில் நான் பரிசோதித்து பார்க்கவில்லை.


இதற்கு மைக்ரோசாப்ட் Windows Master Control Panel shortcut என்று பெயர் தந்துள்ளனர். இதற்குGodmode என்று இதனை பயன்படுத்திய பயனாளர்கள் பெயர் வைத்துள்ளனர்.பயன்படுத்தி பாருங்கள்..
தகவல் பிடித்து இருந்தால் share செய்யவும் 

Read more »

Tuesday, March 26, 2013

Virus தாக்கிய Pendrive இல் இருந்து Data ளை மீட்பது எப்படி ..??


தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள்E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.


  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்
Read more »

Sunday, March 24, 2013

Windows 7 பயன்படுத்த 512 MP RAM ஒரு தடையல்ல..

உங்கள் கணனிகள் சில வருட காலங்களுக்கு முன் கொள்வனவு செய்யப்பட்ட சிறப்பியல்புகள் குறைவான கணனிகளாக இருக்கலாம் அல்லது RAM இன் அளவானது 512MBயை விட குறைவாக காணப்படலாம். இவ்வாறான நிலையில்  Windowsபதிப்புகளில் Windows XP போன்ற இயங்குத்தளத்தையேஉங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவீர்கள். 
சிலருக்கு Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி பயன்படுத்த ஆசையாக இருப்பீர்கள், இதற்கு RAM ஒரு தடையாக அமைந்துள்ளதா? கவலையை விடுங்கள்... இங்கு அவ்வாறான512MBயை விடவும் குறைவான கணனிகளில் Windows 7 பதிப்பை நிறுவுவதற்கான இலகுவான வழியை பகிர்கின்றேன். 
முக்கியாக இச்செயற்பாடினை மேற்கொள்ள Windows 7 இன் 32bit பதிப்பை மட்டுமே பயன்படுத்தலாம்  64bit இயங்குத்தளத்தை 512MB RAMயை விட குறைவான கணனிகளில் இயக்குவது சிரமமானதே.



மேலும் இதற்கு Windows 7 Ultimate பதிப்பை பயன்படுத்த முடியும், ஆனாலும் Home Premium, Home Basicஅல்லது Starter பதிப்புகள் மிகச்சிறந்தது.
கவனிக்க








இதற்கு தேவைப்படுவது
1) Windows 7 32bit ISO பதிப்பு.
2) HEX editor ஒன்று Free Hex Editor Neo(மிகச்சிறந்தது).
3) UltraISO அல்லது powerISO.
இப்போது  படிமுறைகளை பார்ப்போம்.
  1. முதலில் UltraISO அல்லது powerISO வினை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.
  2. Windows 7 32bit ISO வினை mount செய்து  "winsetup.dll" கோப்பை  sources folder இலிருந்துcopy செய்து உங்கள் கணனியில் உள்ள் எதாவது ஒரு local drive வில் Paste செய்து கொள்ளுங்கள்.
  3.  இப்பொழுது Paste செய்து கொண்ட "winsetup.dll" இனை Free Hex Editor Neo இன் உதவியுடன் open செய்து கொள்ளுங்கள் . 


4. அதில் 77 07 3D 78 01 சரக்கோவையை (string) தேடிக் கண்டுப்பிடியுங்கள். 
  1. அதனை  E9 04 00 00 00 சரக்கோவையை  கொண்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Replaceசெய்து save  செய்து கொள்ளுங்கள்


6.பின்னர் UltraISO அல்லது powerISO வின் உதவியுடன் Windows 7 32bit ISO வினை open செய்து கொள்ளுங்கள்.  sources folder யை Open செய்து அதிலுள்ள "winsetup.dll"ஐ நீங்கள் திறுத்தியமைத்த "winsetup.dll" இனை கொண்டு replace செய்யுங்கள். பின்  ei.cfg கோப்பைdelete செய்வதன் மூலம்  அனைத்து windows 7 SKU களையும் unlock செய்து கொள்ளுங்கள் .பின் அதனை ISO வாக save செய்யுங்கள்.
அதனை Burn செய்து Install செய்யுங்கள்.


நீங்களும்  Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி அதன் புதிய வசதிகளை அனுபவியுங்கள்.




Read more »

CMD மூலம் நம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்ய..

Windowsல் நம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்வதற்கு CMD குறியீடுகள் உதவுகின்றன. இவற்றை நாம் தெரிந்து வைப்பதன்முலம் Windowsல் அநேகமான வேலைகளை விரைவாக முடிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.  



Accessibility Controls
access.cpl

Add Hardware Wizard
hdwwiz.cpl

Add/Remove Programs
appwiz.cpl

Administrative Tools
control admintools

Automatic Updates
wuaucpl.cpl

Bluetooth Transfer Wizard
fsquirt

Calculator
calc

Certificate Manager
certmgr.msc

Character Map
charmap

Check Disk Utility
chkdsk

Clipboard Viewer
clipbrd

Command Prompt
cmd

Component Services
dcomcnfg

Computer Management
compmgmt.msc

timedate.cpl
ddeshare

Device Manager
devmgmt.msc

Direct X Control Panel (If Installed)*
directx.cpl

Direct X Troubleshooter
dxdiag

Disk Cleanup Utility
cleanmgr

Disk Defragment
dfrg.msc

Disk Management
diskmgmt.msc

Disk Partition Manager
diskpart

Display Properties
control desktop

Display Properties
desk.cpl

Display Properties (w/Appearance Tab Preselected)
control color

Dr. Watson System Troubleshooting Utility
drwtsn32

Driver Verifier Utility
verifier

Event Viewer
eventvwr.msc

File Signature Verification Tool
sigverif

Findfast
findfast.cpl

Folders Properties
control folders

Fonts
control fonts

Fonts Folder
fonts

Free Cell Card Game
freecell

Game Controllers
joy.cpl

Group Policy Editor (XP Prof)
gpedit.msc

Hearts Card Game
mshearts

Iexpress Wizard
iexpress

Indexing Service
ciadv.msc

Internet Properties
inetcpl.cpl

IP Configuration (Display Connection Configuration)
ipconfig /all

IP Configuration (Display DNS Cache Contents)
ipconfig /displaydns

IP Configuration (Delete DNS Cache Contents)
ipconfig /flushdns

IP Configuration (Release All Connections)
ipconfig /release

IP Configuration (Renew All Connections)
ipconfig /renew

IP Configuration (Refreshes DHCP & Re-Registers DNS)
ipconfig /registerdns

IP Configuration (Display DHCP Class ID)
ipconfig /showclassid

IP Configuration (Modifies DHCP Class ID)
ipconfig /setclassid

Java Control Panel (If Installed)
jpicpl32.cpl

Java Control Panel (If Installed)
javaws

Keyboard Properties
control keyboard

Local Security Settings
secpol.msc

Local Users and Groups
lusrmgr.msc

Logs You Out Of Windows
logoff

Microsoft Chat
winchat

Minesweeper Game
winmine

Mouse Properties
control mouse

Mouse Properties
main.cpl

Network Connections
control netconnections

Network Connections
ncpa.cpl

Network Setup Wizard
netsetup.cpl

Notepad
notepad

Nview Desktop Manager (If Installed)
nvtuicpl.cpl

Object Packager
packager

ODBC Data Source Administrator
odbccp32.cpl

On Screen Keyboard
osk

Opens AC3 Filter (If Installed)
ac3filter.cpl

Password Properties
password.cpl

Performance Monitor
perfmon.msc

Performance Monitor
perfmon

Phone and Modem Options
telephon.cpl

Power Configuration
powercfg.cpl

Printers and Faxes
control printers

Printers Folder
printers

Private Character Editor
eudcedit

Quicktime (If Installed)
QuickTime.cpl

Regional Settings
intl.cpl

Registry Editor
regedit

Registry Editor
regedit32

Remote Desktop
mstsc

Removable Storage
ntmsmgr.msc

Removable Storage Operator Requests
ntmsoprq.msc

Resultant Set of Policy (XP Prof)
rsop.msc

Scanners and Cameras
sticpl.cpl

Scheduled Tasks
control schedtasks

Security Center
wscui.cpl

Services
services.msc

Shared Folders
fsmgmt.msc

Shuts Down Windows
shutdown

Sounds and Audio
mmsys.cpl

Spider Solitare Card Game
spider

SQL Client Configuration
cliconfg

System Configuration Editor
sysedit

System Configuration Utility
msconfig

System File Checker Utility (Scan Immediately)
sfc /scannow

System File Checker Utility (Scan Once At Next Boot)
sfc /scanonce

System File Checker Utility (Scan On Every Boot)
sfc /scanboot

System File Checker Utility (Return to Default Setting)
sfc /revert

System File Checker Utility (Purge File Cache)
sfc /purgecache

System File Checker Utility (Set Cache Size to size x) 
sfc /cachesize=x

System Properties
sysdm.cpl

Task Manager
taskmgr

Telnet Client
telnet

User Account Management
nusrmgr.cpl

Utility Manager
utilman

Windows Firewall
firewall.cpl

Windows Magnifier
magnify

Windows Management Infrastructure
wmimgmt.msc

Windows System Security Tool
syskey

Windows Update Launches
wupdmgr

Windows XP Tour Wizard
tourstart

Wordpad
write

இதை விட உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

Read more »